என் மலர்
நீங்கள் தேடியது "திருச்சி"
- காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- முல்லை நகர், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை,
திருச்சி:
திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.ஹெச். காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி. ராமகிருஷ்ணா நகர்,
முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர் காஜா நகர்,ஜெ.கே. நகர். ஆர்.வி.எஸ். நகர், சுப்ரமணியபுரம், ராஜா தெரு, அண்ணா நகர், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, முல்லை நகர், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை, தர்கா ரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்து உள்ளார்.
- தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மன்னார்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.
திருச்சி:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதன்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் மாலை 5 மணிக்கு பின்னர் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.
பின்னர் இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி இரவு 8:30 வரை நீடித்தது. இதனால் மாநகரில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், பாரதியார் சாலை, மன்னார்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.
இதேபோன்று மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் மழை கொட்டியது. ஒரே நாளில் நேற்று மாவட்டம் முழுவதும் 316.2 மில்லி மீட்டர் மழை பதிவானது அதிகபட்சமாக பொன்னணி ஆறு அணைக்கட்டுப் பகுதியில் 44.4 மீட்டர்
மாவட்டத்தின் இதர பகுதிகளான லால்குடி 22.4 ,தேவி மங்கலம் 5.4, சமயபுரம் 9 ,சிறுகுடி 3.6 ,வாத்தலை அணைக்கட்டு 6.6 , மணப்பாறை 5, கோவில்பட்டி 38.2 ,மருங்காபுரி 28.2, முசிறி 3 , புலிவலம் 2 ,நவலூர் கொட்டப்பட்டு 26.5 ,துவாக்குடி 1.5, கொப்பம்பட்டி 12 ,பொன்மலை 12.8, திருச்சி ஏர்போர்ட் 21.2 ,திருச்சி ஜங்ஷன் 36.4 ,திருச்சி டவுன் 38 என மழை பதிவானது. இந்த மழையினால் நேற்று இரவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
- விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
- வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.
திருச்சியில் பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதிக்கு தவெக தலைவர் விஜய் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.
விஜய்யை காண்பதற்காக 3 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய்யின் பரப்புரையை கேட்க திருச்சி சாலைகள் முழுவதும் மக்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், பிரச்சார வாகனத்தில் வந்த விஜய் தனது கையில் வேல் வைத்தபடி வந்திருந்தார். ரசிகர் ஒருவர் அன்பளிப்பாகத் தந்த வேலை விஜய் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மனிதனும் 3 நாள் பட்டினியாக இருந்தால் அந்த நாயை விட வெறிபிடித்தவனாக மாறி விடுவான்.
- நாய்களை அடைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
அந்த பேரணியில் பங்கேற்று பேசிய பிரியா என்பவர், "பசியினால் தான் நாய் மனிதனை கடிக்க துரத்துகிறது. சாப்பிடாமல் உங்களால இருக்கமுடியுமா? நாய் 3 நாள் சாப்பிடாமல் இருக்கிறது. மனிதனும் 3 நாள் பட்டினியாக இருந்தால் அந்த நாயை விட வெறிபிடித்தவனாக மாறி விடுவான். நாய்களுக்கான கருத்தடையை ஒழுங்காக செய்யுங்கள். நாய்களை அடைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும். நாய்க்கு சாப்பாடு போடுங்கள். இல்லையென்றால் நாய்க்கு வெறி பிடிக்க தான் செய்யும்" என்று தெரிவித்தார்
- தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
- தெருநாய்களுக்கு ஆதரவாக திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்
டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
அந்த பேரணியில் பங்கேற்று பேசிய பெண் ஒருவர், "தெருநாய்க்கு ஒரு பிஸ்கட் போட்டால் காலம் முழுக்க அந்த நாய் வாலாட்டி கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நாயை அடைக்க வேண்டும் என்று சொல்வது மனிதாபிமானமா? தெருநாய்கள் மனிதர்களை கடிக்கிறது என்று கூறுகிறீர்களே? எதாவது ஒரு மனிதன் நாயை அடித்து உதைப்பதால் தான் இன்னொரு மனிதனை நாய் கடிக்கிறது. ஒரு மனுஷன் செஞ்ச கேவலமான செயலால்தான், தற்காப்புக்காக இன்னொரு மனுஷனை நாய் கடிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மனிதாபிமானத்தை கற்றுக்கொடுக்க வில்லை என்றால் யார் கற்று கொடுப்பது? நாய்கள் தற்காத்து கொள்ள தான் மனிதர்களை கடிக்கிறது" என்று தெரிவித்தார்.
- தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது
- தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
- தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
- 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே அறிவிப்பு .
நாளை (வெள்ளிக்கிழமை) சுதநதிர தினம் என்பதால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரெயில் இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பா.ஜ.க.வினர்.,அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் திரண்டு நின்று உற்சாகமாக கையசைத்தனர்.
- சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற மக்களைபார்த்து கையசைத்தபடி சென்றார்.
திருச்சியில் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த பிரதமர் மோடி இன்று காலை 11 மணி அளவில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார். காரில் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி விடுதியில் இருந்து ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
அப்போது சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர்.,அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் திரண்டு நின்று உற்சாகமாக கையசைத்தனர்.
மேலும் பாஜகவினர் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.
வரவேற்பை உற்சாகமாக ஏற்றுகொண்ட பிரதமர் மோடி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, கண்டோன்மென்ட், மாநகராட்சி அலுவலகம், ஒத்தக்கடை , தலைமை தபால் நிலைய சிக்னல் கடந்து டி.வி.எஸ். டோல்கேட், சுப்பிரமணியபுரம், மத்திய சிறை பகுதி சாலை வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற மக்களைபார்த்து கையசைத்தபடி சென்றார்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே ஒத்தக்கடையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இப்பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பிரதமரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படங்களும் இடம்பெற்று இருந்தது.
விமான நிலையம் வந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார்.
+2
- தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
- திருச்சியில் பிரதமரிடம் முதலமைச்சரின் கோரிக்கை மனுவை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதியன்று தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைதொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கஆலோசனை நடத்தினார்.
பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில்,"மருத்துவமனையில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த கோரிக்கை மனுவை திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனை ஆக்காமல் நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்ட்ஙகளுக்கு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். மேலும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
- ரூ.450 கோடியில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
- தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி:
பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி வந்தார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார்.
- வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- மாநகர் மற்றும் விமானநிலைய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் தனியார் ஓட்டல் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்கு வாகனங்கள், பயணிகள் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
விமான நிலையத்தின் கார் பார்க்கிங், பயணிகள் வருகை, புறப்பாடு ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.ஜி. அதிகாரிகள் விமானம் மூலம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் வானில் வட்டமடித்தபடி ரோந்து சென்று கண்காணித்தனர்.
விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் தேவையில்லாத வாகனங்கள் மற்றும் ஆட்கள் செல்வது தடுத்து நிறுத்தப்படுகிறது. விமான நிலைய ஊழியர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதே போல பிரதமர் தங்கும் தனியார் ஓட்டலிலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் எஸ்.பி.ஜி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்னர். இங்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரதமர் வந்து செல்லும் திருச்சி-புதுக்கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, குட்ஷெட் மேம்பாலம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகர் மற்றும் விமானநிலைய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்காக ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் திருச்சி விமான நிலையம் வந்திறங்கின. பிரதமர் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு உள்ளிட்டவைகள் குறித்த ஒத்திகை நடந்தது. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி மற்றும் கடை வீதிகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் முகப்பு சாமியானா பந்தல் மூலம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் தூய்மைப்பணிகள் மற்றும் சாலைகளில் இருந்த குழிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை மதியம் வரை மூட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் விமான நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமானநிலையம் மற்றும் பகுதி முழுவதிலும் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி:
துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி துவாக்குடி பகுதியில் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ,பி,இ,ஆர், & பி.ஹச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி,
பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மன்னார்புரம் செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.






