இந்தியா

நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன், கெஜ்ரிவால் காங்கிரசுக்கு வாக்களிப்பார் - ராகுல்காந்தி

Published On 2024-05-19 12:52 GMT   |   Update On 2024-05-19 12:52 GMT
  • பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்
  • டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகளில் 4-ல் ஆம் ஆத்மியும் 3-ல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன். அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார்.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இரு கட்சி தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒருவேளை பிரதமர் தன் முன் வந்தால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயப் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பேன்" என்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News