இந்தியா

வங்கி வணக்கில் ரூ.9,900 கோடி வரவு- அதிர்ச்சியடைந்த நபர் புகார்

Published On 2024-05-19 16:08 IST   |   Update On 2024-05-19 16:08:00 IST
  • மென்பொருள் கோளாறால் பானுவின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டது.
  • தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ.9,900 கோடி பணம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி மாநிலத்தை சேர்ந்த பானு பிரகாஷ் பரோடா உபி வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் சமீபத்தில் ரூ.99,99,94,95,999.99 (ரூ.99 பில்லியன் 99 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 999) இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பானு பிரகாஷ், உடனே வங்கி கிளைக்கு விரைந்து இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகள் இது குறித்து ஆராய்ந்தனர்.

அப்போது, பிரகாஷின் வங்கி கணக்கு கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன் கணக்கு என்றும், அது செயல்படாத சொத்தாக (என்பிஏ) மாறியது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், மென்பொருள் கோளாறால் பானுவின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டது என்றும் பின்னர் தெரியவந்தது.

தவறை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தொகையை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வங்க மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News