சினிமா

`2.0' இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினிகாந்த்

Published On 2017-10-28 06:10 GMT   |   Update On 2017-10-28 06:10 GMT
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0' படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ராஜு மகாலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஆர்.ஜே.பாலாஜி, ராணா டகுபதி, கரன் ஜோஹர் தொகுத்து வழங்கனர்.

இசைவெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது,



கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது என்றார். மேலும் தவறான திரைப்படங்களை சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும். இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News