சினிமா செய்திகள்

'ஹிட் லிஸ்ட்' படத்தின் ட்ரெய்லரை விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற படக்குழு

Published On 2024-05-25 16:27 GMT   |   Update On 2024-05-25 16:27 GMT
  • விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
  • வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.

'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.

அண்மையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெயிட்டார்.

இந்நிலையில், 'ஹிட் லிஸ்ட்' படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய்யிடம் காண்பித்து படக்குழு வாழ்த்து பெற்றுள்ளது.

1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News