சினிமா செய்திகள்

தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கையால் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் "கில்லி"

Published On 2026-02-16 16:52 IST   |   Update On 2026-02-16 16:52:00 IST
  • திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று ரீரிலீஸ் செய்யப்படுகிறது.
  • கில்லி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்தது.

தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இந்தப் படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. இந்தப் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.

படம் வேளியாகி 22 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தப் படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி கில்லி திரைப்படம் வருகிற 20ஆம் தேதி மீண்டும் ரீரிலீஸ் ஆவதாக சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்தப் படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News