சினிமா செய்திகள்
SK26 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்... புது வீடியோ வெளியிட்ட படக்குழு..!
- சிவகார்த்திகேயனின் 26வது படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு.
- சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப். 16) மாலை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பான புதிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவில் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5.02 மணிக்கு வெளயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.