சினிமா செய்திகள்

ட்ரீம் கேர்ள் – திரைவிமர்சனம்

Published On 2026-02-16 10:03 IST   |   Update On 2026-02-16 10:03:00 IST
  • சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
  • சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்- Solomon Boaz's cinematography is a strength of the film.

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழும் நாயகன் ஜீவா, பின்னணி பாடகியாக உயர வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் நாயகி ஹரிஷ்மிதா – இருவரின் சந்திப்பும் காதலாக மாறுகிறது. வாழ்க்கையை இலகுவாக அனுபவித்து வரும் இந்த காதல் ஜோடியின் உறவில், ஒரு கனவு இடையூறாக வருகிறது. அந்த கனவு, அவர்களின் மனநிலையிலும் உறவிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியில் கனவு என்ன? அவர்கள் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜீவா, நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதா இருவரும் புதிய முகங்கள் என்றாலும், கதையின் முழுப் பளுவையும் ஏந்தும் வகையில் நம்பகமான நடிப்பை வழங்கியுள்ளனர். இயல்பான வெளிப்பாடு மற்றும் அளவான உணர்ச்சி காட்சிகள் இவர்களின் பலமாக அமைகிறது. பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள், திரைக்கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

இயக்கம்

கனவு மற்றும் காதல் இடையிலான உளவியல் மோதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி. அழுத்தமான காதல் அனுபவத்தை வழங்க முயற்சி செய்து இருக்கிறார். சில இடங்களில் நவீன காட்சியமைப்பில் சற்றுக் குறைபாடு தெரிந்தாலும், மொத்தத்தில் படம் ஒரு மென்மையான காதல் முயற்சியாக நினைவில் நிற்கிறது. முக்கோணக் காதல் கதைகள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால், இந்த படத்தில் "கனவு" ஒரு மையக் கருத்தாகவும், மோதலை உருவாக்கும் அம்சமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இசை

இளமாறன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணித்து இருக்கிறது.

ஒளிப்பதிவு

சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

ரேட்டிங்- 2/5

Tags:    

Similar News