சினிமா செய்திகள்

மோகனின் `ஹரா' - அதிரடி ஆக்ஷன் டிரைலர் வெளியானது

Published On 2024-05-26 10:09 GMT   |   Update On 2024-05-26 10:09 GMT
  • 'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.
  • வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் ஜானரில் ஹரா படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இப்படம் ஐபிசி செக்ஷன்களை பற்றியும், சிறுவர்களுக்கு குட் டச் பேட் டச் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. அதைதொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.

கதையில் மோகனின் மகளுக்கு ஒரு விஷயம் நடக்கிறது. அதற்கு காரணமானவர்களை சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு எப்படி பழி வாங்கிகிறார் என்பதே கதைக்களம்.

மோகனை வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மோகன் 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்ட கோழி திரைப்படத்திற்கு பிறகு ஹரா படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News