பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசு திட்டத்திற்கான விளம்பரம் பிரதமர் மோடியை காக்க உதவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi
பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கான விளம்பரம் மோடியை காக்கிறது - ராகுல்
பதிவு: ஜனவரி 22, 2019 20:58
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
கடந்த 2015-ல் அரியானாவில் தொடங்கிய இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து விளம்பரத்துக்காக மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசு திட்டத்துக்கான விளம்பரம் பிரதமர் மோடியை காக்க உதவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு செலவு செய்யப்படும் விளம்பரம் பிரதமர் மோடியை காப்பாற்ற உதவுகிறது என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #PMModi