செய்திகள்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் - ஜெயகுமார் பேட்டி

Published On 2019-06-05 06:20 GMT   |   Update On 2019-06-05 06:20 GMT
பேரறிவாளன் விவகாரம் தொடர்பாக ஆளுநர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

காயிதே மில்லத் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.ம.மு.க. என்பது கட்சியே இல்லை. குழு. லெட்டர்பேடு கட்சி. கடலில் கரைத்த பெருங்காயம் போல அக்கட்சியின் நிலை உள்ளது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையலாம்.

பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். அ.ம.மு.க.விலிருந்து ஏராளமான நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இன்னும் இணைவார்கள்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News