search icon
என் மலர்tooltip icon

    காலச்சுவடு செய்திகள்

    பாலசிங்கம் நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்.
    பாலசிங்கம் நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் முல்லைத்தீவில் முள்ளி வாய்க்கால் என்ற இடத்தில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி, புலிகளின் அமைதிச் செயலகப் பொறுப்பாளர் சீ. புலித்தேவன் ஆகியோரும் 2009ம் ஆண்டு இதே நாளில் (மே 18) சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    நடேசன் முன்னர் இலங்கை காவல்துறையில் பணிபுரிந்தவர். தலைநகர் கொழும்பில் உள்ள நாரகேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விசித்திரா என்ற சிங்களப் பெண்ணைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். விசித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.

    1983-ம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப்படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர். அந்தக்காலப் பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.

    1990-ல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன், 1991-ல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தொடங்கியபோது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2007, நவம்பர் 2-ம் நாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் இறப்பை அடுத்து நடேசன் அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

    முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மே 18 (2009) அதிகாலை 5:45 மணி வரை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக புலிகளின் பேச்சாளர் செல்லப்பா பத்மநாதன் தெரிவித்தார்.

    ஐ.நா. பொதுச் செயலரின் உயரதிகாரி விஜய் நம்பியார், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உறுதியளித்தன் பேரில் நடேசன், புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி உட்பட பொதுமக்கள் சிலர் வெள்ளைக் கொடியைத் தாங்கி சரணடைய வெளியே வந்தபோது அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் நடேசன், புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
    பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்நிறுவனம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

    உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங்குகிறது.

    உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி 1954 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. 
    தென் கிழக்கு ஆப்பிரிக்கான நாடுகளான தான்சானியா மற்றும் கென்யாவின் தலைநகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது.
    தென் கிழக்கு ஆப்பிரிக்கான நாடுகளான தான்சானியா மற்றும் கென்யாவின் தலைநகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் 220-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள். டிரக்கில் ஏற்றி வந்த குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். அமெரிக்க படைகள் சவுதி அரேபியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

    * 1819 - கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

    * 1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

    * 1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்காட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

    * 1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

    * 1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
    சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார்.
    சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை படைத்தார். இவர் தற்போது பணி ஓய்வில் இருக்கிறார். இவரது சாதனையை பாராட்டி சோவியத் ஒன்றிய அஞ்சல் தலையில் இவர் விண்வெளியில் நடந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவை சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என்ற விருதையும், லெனின் விருதையும் பெற்றுள்ளார்.

    மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

    * 1241 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.

    * 1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

    * 1913 - கிரேக்கத்தின் முதலாவது ஜார்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.

    * 1944 - இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    * 1945 - இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.

    * 1953 - மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

    * 1962 - அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

    * 1971 - பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

    * 1989 - எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

    * 1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.
    கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இன்று தான் முதல் போட்டியில் அறிமுகமானார்.

    புதுடெல்லி:
     
    கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இன்று தான் முதல் போட்டியில் அறிமுகமானார்.

    இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம்பிடித்த கிரிக்கெட் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர். இவர், இந்தியாவின் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாட தொடங்கினார். அதன் பயனாக 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சாதனை படைத்தார்.



    1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 15-ம் தேதி தொடங்கிய முதல் போட்டி கராச்சியில் நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அந்த சமயத்தில் தான், 16 வயது இளைஞரான சச்சின், இந்திய அணிக்காக தனது இன்னிங்ஸை விளையாட களமிறங்குகினார். முதல் போட்டியில் 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இளைஞன் பின்னாளில் கிரிகெட்டில் இவ்வளவு பெரிய சாதனை படைப்பார் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த இளைஞன் தான் இன்று இந்திய இளைஞர்களின் கிரிக்கெட் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கர்.



    வலது கை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் எடுத்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,466 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் வராலாற்றில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர், சச்சின்தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரனகள் குவித்த வீரர் என்ற பெருமையும் சச்சினையே சேரும். ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த விரர், சச்சின்.

    இந்திய அரசின் அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூசண் விருதுகளை பெற்றுள்ளார். மராட்டிய மாநில அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான். இந்த சாதனைகளை படைத்த சச்சின், 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.


    செவிலியர் தொண்டில் சிறந்து விளங்கியதுடன் கிரிமியா போரில் உயிருக்கு போராடிய பலரின் கண்களுக்கு ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’யாக தோன்றிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவைப் போற்றுவோம்.
    லண்டன்:

    இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியரின் மூன்றாவது மகளாக இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் 12.5.1820 அன்று பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

    சிறுவயதில் மிகவும் துடிப்பாக இருந்த நைட்டிங்கேல் கணிதத்தை சிறப்புப் பாடமாக தேர்வு செய்து பயின்றார். மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டு மொழிகளையும் கற்றார். செவியலராகி மக்களுக்கு தொண்டு செய்ய விரும்பிய தனது எதிர்கால திட்டத்தை பெற்றோரிடம் அவர் கூறியபோது அவர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை.

    செவியலராகும் குறிக்கோளுக்காக தன்னை காதலித்தவரின் திருமண ஆசையை 1849-ம் ஆண்டில் நிராகரித்தார். 1850-51 ஆண்டுகளுக்கிடையில் ஜெர்மனியின் கைசெர்ஸ்வெர்த் பகுதியில் உள்ள பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து செவிலியராக மாறினார்.

    பின்னர் லண்டன் நகரில் உள்ள ஹார்லே ஸ்டிரீட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கவர்னருக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையால் செவிலியர்களுக்கான மேற்பார்வையாளராக (சூப்பிரண்ட்) உயர்த்தப்பட்டார்.



    அந்த காலகட்டத்தில் காலரா எனப்படும் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் குழுவுக்கும் இவரே தலைமை தாங்கினார்.

    கடந்த 1854-56 ஆண்டுகளுக்கு இடையில் ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரீமியனில் நடைபெற்ற போரில் சுமார் 18 ஆயிரம் வீரர்கள் காயம்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.

    கான்ஸ்டட்டின்நோப்புல் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதியின்றி மூட்டைப்பூச்சிகள் மற்றும் எலிகளுக்கு இடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர்களுக்கு நைட்டிங்கேல் குழுவினர் இடையறாது மருத்துவ சிகிச்சை அளித்தும், ஆறுதல் மொழி பேசியும் குணப்படுத்தி வந்தனர்.

    தண்ணீர்கூட அங்கு ரேஷன் முறையில் வழங்கப்பட்டதால் பல வீரர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சோகம் அவரது நெஞ்சைப் பிழிந்தது. முதலில் அந்த மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்.



    இரவு நேரங்களில் நைட்டிங்கேல் கையில் மெழுகு விளக்கை ஏந்தியபடி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களை நலம் விசாரித்து, ஆறுதல் மொழியுடன் அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, மனச்சுமையை போக்கி, விரைவில் குணப்படுத்தினார்.

    இதைகண்ட ராணுவ வீரர்கள், ‘தங்களைக் காக்க விண்ணுலகில் இருந்து தேவதையொன்று மண்ணுலகுக்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர். போருக்குப்பின் தனது ஊருக்கு  திரும்பிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலை அங்குள்ள மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனால், விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக நன்கறியப்பட்ட பிரபலமாக பி.பி.சி. வானொலி இவரை அறிவித்தது.

    இங்கிலாந்து ராணி விக்டோரியா ‘நைட்டிங்கேல் ஜுவல்’ எனப்படும் ஆபரணத்தை இவருக்கு விருதாக வழங்கி கவுரவித்தார். இந்த விருதுடன் அளிக்கப்பட்ட பணமான இரண்டரை லட்சம் டாலர்களை கொண்டு 1860-ம் ஆண்டு செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியை நைட்டிங்கேல் தொடங்கினார். இங்கு செவியர் பயிற்சி பள்ளி ஒன்றும் உருவானது.

    அவரது அரிய சேவையை பாராட்டி அந்நாட்களில் கவிதைகள், கதைகள், பாடல்கள், நாடகங்கள் பல உருவாக்கப்பட்டு மக்களிடையே மிகவும் புகழுக்குரிய பெண்மணியாக உயர்ந்தார். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல் வாழ வேண்டும் என பல இளம்பெண்கள் சபதமேற்கும் அளவுக்கு அவர் விளங்கினார். மிக உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த பல பெண்கள் அவரது பள்ளியில் சேர்ந்து செவிலியர் பயிற்சி பெற்று நோயாளிகளுக்கு சேவையாற்ற முன்வந்தனர்.

    இடைவிடாத பணியின்போது ‘கிரிமியன் காய்ச்சல்’ கடுமையான தொற்றுநோய்க்குள்ளாகி மேஃபேர் நகரில் உள்ள தனது வீட்டில் பல ஆண்டுகள் அவர் படுக்கையில் கிடக்க நேரிட்டது. இருப்பினும் தனது 38-வது வயதில் படுக்கையில் இருந்தபடியே மருத்துவ துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார்.

    நடமாட இயலாத நிலையிலும் நலிவுற்ற நோயாளிகளின் துயர்துடைக்கும் பல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இந்தியாவிலும் சுகாதாரத்துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு விக்டோரியா மகாராணி செஞ்சிலுவை சங்க விருதை வழங்கினார்.
    1907-ம் ஆண்டு பிரிட்டானிய மன்னரின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விளங்கினார்.

    1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமானது. ஆகஸ்ட் 12-ம் தேதி பல்வேறு நோய்கள் ஒருசேர தாக்கியதில் 13-8-1910 அன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த ‘கைவிளக்கு ஏந்திய தேவதையின்’ இன்னுயிர் பிரிந்தது.

    பிரிட்டிஷ் அரச குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்றிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வந்த வாய்ப்பை அவரது குடும்பத்தார் நிராகரித்து விட்டனர். எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் தனது இறுதி யாத்திரை நடைபெற வேண்டும் என்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

    இங்கிலாந்தின் ஹேம்ப்ஷைர் அருகேயுள்ள செயிண்ட் மார்கரெட் சர்ச் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் தொடங்கப்பட்ட செவிலியர் பயிற்சிப் பள்ளி தற்போது அவரது நினைவிடமாகவும் அருங்காட்சியகமாகவும் விளங்கி வருகிறது.

    ‘கிரிமியாவின் தேவதை’ என்றும் அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெற்ற விருதுகள், பரிசுகள் அவர் பயன்படுத்திய உபகரணங்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    1987-ம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் மாநாட்டில் உலகளவில் செவிலியர் தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, 1991-ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றியும், பாராட்டியும் வருகின்றன.

    அவரது நினைவாக, ஆண்டுதோறும் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் உள்ள விளக்குகள் அங்குள்ள செவிலியர்களால் ஏற்றப்பட்டு, அங்குள்ள உயர்ந்த பீடத்தில் அவர்கள் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

    பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே மாதம் 12-ம் தேதி உலகின் பல நாடுகள் செவிலியர் துறையில் சிறந்த சேவையாற்றுபவர்களை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற சிறப்பு விருதால் கவுரவித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற செவிலியர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து இவ்விருதினை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.



    ×