குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் - ஜன.26-2001

குஜராத்தில் 2001-ம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்தனர்.
இந்தியா- தேசிய வாக்காளர் தினம் - ஜன.25

தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.
இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் - ஜன.25-1971

1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18-வது மாநிலமாக 25 ஜனவரி 1971-ல் அறிவிக்கப்பட்டது.
தெற்காசியாவின் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் திறக்கப்பட்ட நாள் - ஜன.24- 1857

தெற்காசியாவில் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் முதன்முதலாக 1857-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமான விபத்தில் 117 பேர் பலி - ஜன.24- 1966

ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் ஜன. 23, 1897

இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது ஜன.23, 1957

திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது, செம்மொழியுமான தமிழ் 1957 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
ஜெட் விமானம் முதன் முறையாக சேவைக்கு வந்த நாள் - ஜன.22- 1952

ஜெட் விமானம் உலகின் முதன் முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி சேவைக்கு வந்தது.
ஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள் - ஜன.22- 1999

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மர்ம மனிதர்களால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர்.
திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் மாநிலங்களான நாள் - ஜன.21- 1972

திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்றும் இந்தியாவின் தனி மாநிலங்களாக ஆக்கப்பட்ட நாள்.
சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் - ஜன.21- 1960

சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது.
அமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் தினம் - ஜன.20- 1937

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் அதிகாரபூர்வமான கூடைப் பந்தாட்ட போட்டி மசாச்சூசெட்டில் இடம்பெற்ற நாள்: 20-1-1892

கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891-ல் இந்த விளையாட்டு பிறந்தது. பின்னர், 1892ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி அதிகாரபூர்வமான ஆட்டம் நடைபெற்றது.
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
அமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்: 19-1-1903

ஐக்கிய அமெரிக்கா- இங்கிலாந்துக்கு இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாளாகும்.
எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896

மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர்.
தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996

1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் மரணமடைந்தார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் - ஜன.17, 1917

நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் பிறந்தார்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6434 பேர் பலியாயினர் - ஜன.17, 1995

ஜப்பானின் கோபே நகரில் 1995-ஆம் ஆண்டு இதே நாளில் 7.3 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 6434 பேர் பலியாயினர்.