search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவுநாள்"

    • அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர்:

    சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 92-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பாரி கணபதி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், திருப்பூர் குமரன் அறக்கட்டளை நிர்வாகி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதேப்போல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவினாசி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க.சார்பில், ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    அனுப்புர்பாளையம் : 

    அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றதுணைத்தலைவர் என்.சின்னக்கண்ணு, கிளாகுளம் ராமன், வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் பேபி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்தி, வடக்கு ஒன்றிய மீனவரணி செயலாளர் தினேஷ் குமார், ஒன்றிய இளைஞரணி பாசறை துணை செயலாளர் அய்யாச்சாமி, வார்டு உறுப்பினர்கள் குமரேசன், கார்த்தி, செல்வி, சித்ரா, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் அவினாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சியிலுள்ள கிராமங்களிலும் அ.தி.மு.க.சார்பில், ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 86-வது நினைவு நாள் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர் சதீஷ்குமார், காங்கிரஸ் கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கால்பிரவு, பெரிய கோட்டை, திருப்பாசேத்தி பகுதியில் வ.உ.சி. நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.

    • மறைந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜான்மோசின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
    • ஜான்மோசஸ் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு தையல் எந்திரம், கல்வி நிதிஉதவி, நோட்டு புத்தகங்களை சாலமன் பாப்பையா வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் மறைந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜான்மோசசின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு, மாநில செயலாளர் செல்லப்பாண்டி தலைமையில் நடந்தது. ஜான்மோசசின் மகன்கள் ஜான்மணிபாரத், ஜான் நோயல் ராஜா, ஜான் இனியன் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் சாலமன்பாப்பையா நினைவுரை வழங்கினார். கிரம்மர்சுரேஸ், காங்கிரஸ் நிர்வாகி பி.காந்தி, சமூகநீதி கட்சி தலைவர் எஸ்.பால்ராஜ், தி.மு.க பிரமுகர் பொன்.வசந்த், பெரியார் பண்பாட்டு கழக தலைவர் வரதராசன், விக்டோரியா எட்வர்டு மன்றதலைவர் இஸ்மாயில், சிவாஜி மன்ற தலைவர் நாகராஜன், தமிழர்தேசிய முன்னணி நகர தலைவர் கணேசன், சமூகநீதி கட்சி தலைவர் கூடலிங்கம்,வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் அம்மாவாசி, மதசார்பற்ற ஜனதாதளம் நகர செயலாளர் லிங்கம், பழனிகுமார், கவிஞர்கள் பொற்கை பாண்டியன், ரேவதி, பொயட் ரவி, தொல்காப்பியன், துளிர் உள்பட பலர் பேசினர்.

    வைகை ராஜன் எழுதிய புத்தகத்தை ஜான் மணி பாரத் பெற்று கொண்டார். ஜான்மோசஸ் குடும்பத்தினர், சின்மயா பைனான்ஸ் பாக்கியராஜ், குருசாமி மற்றும் ஊழியர்கள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர். ஜான்மோசஸ் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு தையல் எந்திரம், கல்வி நிதிஉதவி, நோட்டு புத்தகங்களை சாலமன் பாப்பையா வழங்கினார். இதில் ஜனதாதளம் பிரமுகர்கள், முன்னாள் தலைவர் நாகேந்திரன், தொழிலாளர் அணித்தலைவர் ரவீந்திரன், செயலாளர் புதூர் சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் கழகத்தின் சார்பாக கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது .இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் துணைச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ் , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11 -வது வார்டு கவுன்சிலர் தயாளன்வினோஜ்குமார் , ஒன்றிய பிரதிநிதி சண்முகம், எழிலரசன் மற்றும் வார்டு செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, சீனிவாசன், பாலு, ஆறுமுகம், பழனிச்சாமி, மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் மங்கலம் தி.மு.க. கட்சியை சேர்ந்த தம்பணன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜுனைத், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பிரதிநிதி சகாப்தீன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற 9வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரிஸ், ஒன்றிய பொறுப்புகுழு பாபு, நீலி,ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர் முருகசாமி, சுல்தான்பேட்டை ஆதி திராவிடர் காலனி கிளை செயலாளர் கிட்டான் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகர்மன்ற தலைவர் மத்தீன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.

    உடுமலை :

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட செயலாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் சி.வேலுச்சாமி, நகர மன்ற தலைவர் மத்தீன், நகர மன்ற துணை தலைவர் எஸ்.கலைராஜன் , வக்கீல் எஸ்.செந்தில், ரேணுகா, டி ஜவகர்,அப்பாசாமி, யு .என். பி.குமார், டி.ஆறுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை நகர தி.மு.க. சார்பாக 32,33-வது வார்டில் கருணாநிதியின் உருவ படத்துக்கு உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன், யு. என். குமார் ,வக்கீல் செந்தில், 33 வது வார்டு செயலாளர் ,முருகேசன் ,ஜவகர் மற்றும் உடுமலை நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம் ,முன்னாள் அமைப்பாளர் குமார் ,சந்திரன் ,ஆர் .டி .எஸ் .ரேணுகா ,தனபால் ,நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுச்சாமி ,ரீகன், சாந்தி ,கிருபாகரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தினர்.
    • பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி. கே. டி. நாகராஜன், 3வது மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம். எஸ் .ஆர். ராஜ், தெற்கு மாநகர இளைஞர் அணி பிஆர்.செந்தில்குமார், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்,36 -வது வார்டு கவுன்சிலர் திவாகர் மற்றும் அமைப்பாளர் ,கவுன்சிலர்கள் ,நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு.

    பல்லடம் :

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பல்லடம் தி.மு.க. சார்பில் கொசவம்பாளையம் ரோட்டில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நகராட்சி மன்றத் தலைவர்கள் பி. ஏ. சேகர், ராமமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் சம்பத், மலர்கொடி, திண்டு பாலு, பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் அழைப்பு.
    • காலை 9.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற உள்ளது.

    மடத்துக்குளம் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நாளை 7-ந் தேதி காலை 9 மணியளவில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.ஆட்சியில் இருந்த நேரங்களில் பல உன்னத சட்டதிட்டங்களை நிலை நாட்டிய தமிழினத் தலைவர், நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் மீது கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    கலைஞரின் நினைவு நாளையொட்டி ஏழை, எளிய பொதுமக்களுக்கும், ஆதரவற்றோர், முதியோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஏற்பாடு செய்திட வேண்டும்.மேலும் அவரவர் பகுதிகளில் வீட்டு முன்பு கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நாளை காலை 9.30 மணி அளவில் உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவரின் உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.
    • இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் அவர் விதைத்த பல்வேறு கருத்துக்கள் பற்றிய குறும்படங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகே உள்ள இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை செய்த கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் குடியரசுத் தலைவராய் அவர் இருந்த காலகட்டங்களில் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் அவர் விதைத்த பல்வேறு கருத்துக்கள் பற்றிய குறும்படங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நாமும் பாடுபட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாதனைப்பயணம் பற்றி தலைமை ஆசிரியர் சாவித்திரி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.

    ×