search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paramakudi"

    • அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    பரமக்குடி

    பரமக்குடி அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவ தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி (எ) பாபு தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் கடமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

    பரமக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 15 பவுன் நகைகளை மர்ம மனிதன் கொள்ளையடித்து சென்றான்.

    பரமக்குடி:

    பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட அ.காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு, விவசாயி. இவருடைய மனைவி பூமயில் (வயது 42).

    கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் யாரோ மர்ம மனிதன் அவர்களது வீட்டின் மேற்கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்தான்.

    அவன், பூமயில் கழுத்தில் அணிந்திருந்த 3 தங்க சங்கிலிகளை பறித்தான். அப்போது கண் விழித்த பூமயில் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம மனிதன் பூமயில் கழுத்தில் கிடந்த 3 தங்க சங்கிலிகளையும் பறித்துக்கொண்டு ஓடினான். அவனை ராசுதுரத்தி சென்றார். அதற்கு பலன் இல்லை.

    இதுகுறித்து நயினார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. 15 பவுன் நகைகள் கொள்ளை போனதாக புகாரில் கூறப்பட்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமக்குடி அருகே பாதி எரிந்த நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரை எரித்துக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ளது எஸ்.அண்டக்குடி கிராமம். இங்குள்ள வாழவந்தான் கோவில் அருகே முட்புதரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

    இதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் பொதுவக்குடி கிராம நிர்வாக அதிகாரி நாகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயங்களையும் சேகரித்தனர்.

    எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எரித்துக் கொன்றது யார்? எதற்காக எரித்துக் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×