அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
Published on

பரமக்குடி

பரமக்குடி அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவ தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி (எ) பாபு தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் கடமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com