என் மலர்

  நீங்கள் தேடியது "4-lane road"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
  • சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது.

  கள்ளக்குறிச்சி:

  சின்னசேலம் அருகே உள்ள கொங்கு தனியார் மண்டபத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது. சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை முழுமையான4 வழி சாலையாக மாற்றக் கூறி நடை பயணம் சின்ன சேலத்தில் நடந்தது.  சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 37 கிலோமீட்டர் நீளம் உள்ள 9 இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது.

  இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் கனரக இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழி சாலைகளில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழி சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை எனவே தமிழக அரசும் ஒன்றிய அரசும் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன்னிறுத்தி நடை பயணம் நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஜெ.மெட்டூர் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
  • புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிசாலையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

  செம்பட்டி:

  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் தோட்டங்கள் மற்றும் விவசாய பகுதிகளுக்கு செல்வதற்கு பிரதான சாலை உள்ளது.

  அதேபோல், மல்லையாபுரம் பகுதி மக்கள் எஸ்.பாறைப்பட்டி, திண்டுக்கல் மற்றும் செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பிரதான சாலை உள்ளது. இந்நிலையில் தற்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஜெ.மெட்டூர் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

  இதனால், எஸ்.பாறைப்பட்டி மக்கள் புதிய 4 வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு வழியாகச் சென்று பின்னர், 4 வழிச்சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இப்படி கடக்கும் போது விபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.

  இதனால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 4 வழிசாலையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

  இந்த கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், வேலுச்சாமி எம்.பி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவா ய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கள் அந்த இடத்திற்கு நேரில் சென்று மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்பு இருக்குமா? என ஆய்வு செய்தனர்.

  அப்போது அங்கு கூடியிருந்த எஸ்.பாறைப்பட்டி, மல்லையா புரம் கிராம பொதுமக்கள், விவசாயிகள் தங்களுக்கு இந்த இடத்தில் கண்டிப்பாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர்.

  இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து சென்றனர். ஆய்வின்போது, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சக்திவேல், கிராம முக்கிய ஸ்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மானாமதுரை 4 வழிச்சாலையில் தடுப்புசுவர் இல்லை.
  • கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூர்வீக வைகைபாசனபகுதியாகும். வைகை ஆற்றின் கரைபகுதியில் மதுரை- ராமேசுவரம் 4 வழிசாலை உள்ளது. திருப்புவனம் முதல் மானாமதுரை மேலபசலை ரெயில் மேம்பாலம் வரை கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் உள்ளது. 3 முறை வைகை அணை நிரம்பியதால் 2 மாதங்களாக வைகை ஆற்றில் வந்த தண்ணீர் சாலையோர கால்வாய்களில் செல்கிறது. இந்த சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் இல்லை. கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

  பின்னால் வந்த திருப்புவனத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவர் உடனடியாக தண்ணீரில் நீந்தி காரில் இருந்தவர்களை மீட்டார். கால்வாய்களில் தண்ணீர் இல்லாத போதும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

  விபத்துக்களை தடுக்கும் வகையில் மதுரை-ராமேசுவரம் 4 வழிசாலையில் உள்ள கால்வாய் கரைகளில் தடுப்பு சுவர்கள், தற்காலிக இரும்பு வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  ×