search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமளாபுரம்-மங்கலத்தில் கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி
    X

    சாமளாபுரத்தில் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். மங்கலத்தில்ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி., மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    சாமளாபுரம்-மங்கலத்தில் கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி

    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் கழகத்தின் சார்பாக கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது .இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் துணைச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ் , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11 -வது வார்டு கவுன்சிலர் தயாளன்வினோஜ்குமார் , ஒன்றிய பிரதிநிதி சண்முகம், எழிலரசன் மற்றும் வார்டு செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, சீனிவாசன், பாலு, ஆறுமுகம், பழனிச்சாமி, மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் மங்கலம் தி.மு.க. கட்சியை சேர்ந்த தம்பணன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜுனைத், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பிரதிநிதி சகாப்தீன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற 9வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரிஸ், ஒன்றிய பொறுப்புகுழு பாபு, நீலி,ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர் முருகசாமி, சுல்தான்பேட்டை ஆதி திராவிடர் காலனி கிளை செயலாளர் கிட்டான் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×