search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peace rally"

    • தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.
    • அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியில் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.

    இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    எண்ணித் துணிக கருமம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
    • தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா சமாதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையொட்டி அண்ணா-எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அண்ணாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்குதான் மலர்தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி தி.மு.க.வினர் அமைதி பேரணியாக சென்றனர்.

    தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து அமைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஐ.பெரியசாமி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மயிலை த.வேலு, இளைய அருணா மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி நெல்லை தி.மு.க சார்பில் அமைதிப்பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
    • நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி நெல்லை தி.மு.க சார்பில் அமைதிப்பேரணி நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    மத்திய மாவட்டம்

    இது தொடர்பாக தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா நினைவு நாளையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது. நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையை பேரணி அடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். எனவே பேரணியில் தி.மு.க. தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை கிழக்கு மாவட்டம்

    இதேபோல நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், அண்ணா நினைவு நாளையொட்டி அமைதி பேரணி நாளை காலை 9 மணிக்கு களக்காடு காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்குகிறது. அண்ணா சிலை அருகே பேரணி நிறைவடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    • புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டது.
    • ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர்.

    அரவேணு

    கோத்தகிரியில் பழைய உழவர் சந்தைக்கு மாற்றாக புதிய உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோத்தர் பழங்குடியின மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.

    இந்த பேரணியானது கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு, பாண்டியன்பார்க், கிருஷ்ணாபுதூர், கம்பாய் கடை, மார்க்கெட், ராம்சண்ட் என முக்கிய சாலைகள் வழியாக தாசில்தார் அலுவலகம் சென்று மனுவை வழங்கினார்.

    பின்னர் ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர். அமைதி பேரணியில் பங்கேற்ற மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, கருப்பு கொடியுடன் தங்களது பாரம்பரிய இசையை முழங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.

    இதுகுறித்து பேரணியை தலைமை ஏற்று நடத்திய கம்டே சுப்பிரமணிய கூறுகையில், நாங்கள் உழவர் சந்தைக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் பழங்குடியின மக்களின் கோவில் அமைந்துள்ளதால் கோவிலின் புனிதத் தன்மை கெட்டுப் போய்விடும் என்பதால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்தே எங்களது கோரிக்கை என்றார்.

    • அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    கோவை

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் தொடங்கிய அமைதி பேரணி சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோடு, வி.கே.கே.மேனன் ரோடு வழியாக காந்திபுரம் நகர பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஊர்வலம் வந்தடைந்தது.

    பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன்,கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், சுகாதாரகுழு தலைவர் மாரிச்செல்வன், இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, பேரூர்க்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் , மண்டல நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் , மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் தி.மு.கவினர் வழங்கினர்.

    • திருமங்கலத்தில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.
    • கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

     மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் உத்தம தலைவர், தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், செம்மொழி கண்ட நாயகர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் வருகிற 7-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாபெரும் அமைதிப் பேரணி புறப்பட்டு, திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகம் சென்றடைந்து அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

    கருணாநிதி நினைவே ந்தலை போற்றும் இந்த நிகழ்ச்சிகளில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னோடிகள், ஊராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாளையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ந்தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர். #DMK #MKStalin #AnnaMemorialDay
    சென்னை:

    சென்னை மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சி தந்த காவியத்தலைவர், உலகத்தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்- “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன்.

    “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன், சுயமரியாதை சுடரொளி, சொக்க வைக்கும் சொற்பொறிவாளர், எழுத்துவேந்தர், தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு நாளையொட்டி கழக தலைவர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி-3 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.



    பின்னர் இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்று அடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #DMK #MKStalin #AnnaMemorialDay

    கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று மு.க.அழகிரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு மு.க.முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #MKMuthu #MKAlagiri
    சென்னை:

    கருணாநிதி மறைந்து 30-வது நாளான நேற்று அழகிரி தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நேற்று மு.க.அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ‘என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்’ மு.க.முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம் அழகிரி ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #MKMuthu #MKAlagiri

    சென்னையில் இன்று தான் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். #MKAlagiri #PeaceRally #DMK
    சென்னை:

    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.

    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



    பின்னர் மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும், பேரணிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    தனது பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வந்திருப்பதாக கூறிய அவர், இந்த பேரணியில் பங்கேற்றதற்காக அனைவரையும் நீக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த பேரணிக்கான காரணம் குறித்து கேட்டபோது, மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மட்டுமே இந்த பேரணி நடத்தப்பட்டதாகவும், வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அழகிரி கூறினார். #MKAlagiri #PeaceRally #DMK
    சென்னையில் நடந்த அமைதிப் பேரணியின் முடிவில், கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    சென்னை:

    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.



    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து காலை 11.25 மணியளவில் மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டர். இவர்களில் பெரும்பாலானோர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர்.

    அமைதியாக நடைபெற்ற இந்த பேரணி 12.40 மணியளவில் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது. இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.அழகிரியின் அமைதி பேரணி நடைபெற்ற சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
    செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணி குறித்து திருச்சியில் அழகிரி ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
    திருச்சி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு செப்டம்பர் 5-ந் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என்றும், அந்த பேரணியில் கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் தன் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்டுவேன் என்றும் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி கூறினார். இதையடுத்து நேற்று மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் திருச்சியில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர முன்னாள் தி.மு.க. பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் சங்கர்கணேஷ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறுகையில், "வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அழகிரியை கட்சியில் சேர்த்து அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் பேரணியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் பங்கேற்பது என முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார். 
    சென்னையில் 5-ந்தேதி நடைபெற உள்ள அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். #MKAzhagiri #Karunanidhi
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் முக்கிய பதவி கேட்டு முன்னாள் மத்திய மந்திரியும், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி திடீர் போர்க்கொடி தூக்கி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி, தந்தை கூறும் போது எனது மனக்குமுறல்களை வெளியிடுவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 5-ந் தேதி சென்னை திருவல்லிக் கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி செல்கிறார். இதில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடம் மு.க. அழகிரி ஆதரவு திரட்டி வருகிறார்.


    மேலும் தி.மு.க.வில் உள்ள மு.க. ஸ்டாலின் அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மு.க. அழகிரி ஈடுபட்டுள்ளார்.

    அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள அமைதி பேரணிக்கு அனைவரும் திரண்டு வரவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரவேண்டும், மேலும் கருணாநிதி உருவப்படத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி வரவேண்டும். அமைதி பேரணி மிக அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

    பின்னர் நிர்வாகிகளிடம் ஒவ்வொருவரும் எத்தனை பேரை அமைதி பேரணிக்கு அழைத்து வருகிறீர்கள் என்ற விவரங்களை மு.க. அழகிரி கேட்டறிந்தார்.

    இந்த ஆலோசனையில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் சின்னான், முபாரக் மந்திரி, உதயகுமார், கோபிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

    அமைதி பேரணி நடந்து முடிந்ததும் அடுத்த கட்டமாக முக்கிய நடவடிக்கையிலும் மு.க. அழகிரி ஈடுபடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    மு.க.அழகிரி தனது வீட்டு முன்பு போடப்பட்ட பந்தலில் அமர்ந்து தொண்டர்களை சந்தித்தார்.

    அப்போது ‘‘அஞ்சா நெஞ்சன் வாழ்க, கலைஞரின் வாரிசே வாழ்க’’ என்று தொண்டர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #MKAzhagiri #Karunanidhi #MKStalin #DMK
    ×