search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு நாள்-கோவையில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்
    X

    கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு நாள்-கோவையில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்

    • அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    கோவை

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் தொடங்கிய அமைதி பேரணி சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோடு, வி.கே.கே.மேனன் ரோடு வழியாக காந்திபுரம் நகர பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஊர்வலம் வந்தடைந்தது.

    பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன்,கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், சுகாதாரகுழு தலைவர் மாரிச்செல்வன், இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, பேரூர்க்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் , மண்டல நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் , மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் தி.மு.கவினர் வழங்கினர்.

    Next Story
    ×