search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேச்சுவார்த்தைக்கு தயார் என மோடி கூறவில்லை - பல்டி அடித்த பாகிஸ்தான்
    X

    பேச்சுவார்த்தைக்கு தயார் என மோடி கூறவில்லை - பல்டி அடித்த பாகிஸ்தான்

    பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மோடி வாழ்த்து கடிதத்தில் கூறியிருந்ததாக பேசிய பாகிஸ்தான் மந்திரி தெரிவித்த நிலையில், தற்போது மோடி அப்படி கூறவில்லை என மறுத்துள்ளது. #Pakistan #PMModi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பதவியேற்றது. இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார்.

    பாகிஸ்தான் அரசை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதி பேச்சுக்கு அழைத்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முன்னர் கூறியிருந்தார். 

    ஆனால், தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது பாகிஸ்தான். தங்கள் அமைச்சர் அப்படி ஏதும் கூறவில்லை என்று, ஊடகங்களில் பரவி வரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

    பிரதமர் மோடி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியதாக சொல்லப்பட்ட கடிதத்தில் “ இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு முறை நீடிக்க வேண்டும்” என எழுதி இருந்ததாக தகவல்கள் கூறின.

    இந்திய அரசு தரப்பில் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தீவிரவாதமும், அமைதிப் பேச்சும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று இந்திய அரசு தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி “ அமைதி மற்றும் வளத்தை பெருக்குவதன் மூலம், தீவரவாதத்தை கட்டுப்படுத்தி, முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

    பிரதமர் மோடி அனுப்பியதாக கூறப்பட்ட அந்த கடிதம் பற்றி பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி “வெளியுறவு செயலாளர், இந்திய பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இன்று பாகிஸ்தான் இதற்கு விளக்கம் அளித்துள்ளது அதில் “ எங்கள் வெளியுறவு அமைச்சர், இந்திய பிரதமர் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாக கூறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஊடகங்களால் தேவை இல்லாமல் கிளப்பி விடப்பட்ட வதந்தி என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மோடி, இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், “இரு நாடுகளின் பங்களிப்பு தான், முன்னோக்கி செல்ல வாய்ப்பு” என்ற தொணியில் எழுதியிருந்ததாக, குரேஷி முன்னதாக விளக்கியதாகவும், பாகிஸ்தான் கூறி மறுத்துள்ளது.

    முன்னதாக இந்தியாவுடன் நட்புறவில் ஈடுபட தயாராக இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இந்தியா எங்களுடன் பேச ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் என்றும் இம்ரான் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×