search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு கருப்பு தினம்- ஆலன் பார்டர் கருத்து
    X

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு கருப்பு தினம்- ஆலன் பார்டர் கருத்து

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.#SAvAUS #Smith
    சுமித் விவகாரம் குறித்து பிரபல வீரர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ஆலன் பார்டர் (ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்):



     பந்தை சேதப்படுத்தியது ஏமாற்றும் செயலாகும். வீரர்கள் மற்றும் ரசிகர்கள் முன்பு நிகழும் மோசமான குற்றமாகும். ஆஸ்திரேலியா வலுவான பந்துவீச்சு வரிசையை கொண்டது. அப்படி இருக்கும் போது மோசடியில் ஈடுபடுவது ஏன்? பந்தை சேதப்படுத்த இளம் வீரரை கேப்டன் சுமித் எப்படி அனுமதித்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு கருப்பு தினமாகும்.

    கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர்):



    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பார்த்து தற்போது உலகமே சிரிக்கிறது. இந்த வி‌ஷயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமானது.

    நாசர் உசேன் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்): ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இந்த மோசடி முன் கூட்டியே திட்டமிட்ட செயலாகும்.

    மைக்கேல் வாகன் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்): ஸ்டீவன் சுமித், அவரது வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஒட்டு மொத்தமாக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை ஏற்றுக் கொள்கிறது. அப்படித்தான் ஆஸ்திரேலியா விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் இந்த மோசடி முயற்சியில் ஈடுபட முயன்றார்களா? என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.

    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பதிவில் ஐ.சி.சி.க்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-



    ஐ.சி.சி.யின் சிகிச்சை சிறப்பாக உள்ளது. உங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா? பேன்கிராப்டருக்கு தடை விதிக்காதது ஏன்? 2001-ம் ஆண்டு இதுபோன்ற விவகாரத்தில் இந்திய வீரர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2008-ல் சிட்னி விவகாரத்தில் 3 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது.

    இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.
    Next Story
    ×