search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியாவை எதிர்த்து ரேபரேலியில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப்சிங் போட்டி
    X

    சோனியாவை எதிர்த்து ரேபரேலியில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப்சிங் போட்டி

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார் என பாஜக அறிவித்துள்ளது. #LSpolls2019 #UttarPradesh #DineshPratapSingh #SoniaGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பாஜக சார்பில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதில், உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.

    இதேபோல், உ.பி.யின் அசம்கார் தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவை எதிர்த்து போஜ்பூரி நடிகர் மற்றும் பாடகரான தினேஷ் லால் யாதவும், மெயின்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவை எதிர்த்து பிரேம் சிங் ஷக்யாவும் போட்டியிடுகின்றனர். #LSpolls2019 #UttarPradesh #DineshPratapSingh #SoniaGandhi
    Next Story
    ×