search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார்: சித்தராமையா
    X

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார்: சித்தராமையா

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #RahulGandhi #Siddaramaiah
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

    தனித்து போட்டியிடுவதாக மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறி இருப்பதை கவனித்தேன். நாங்கள் அனைவரும் உட்கார்ந்து பேசி தொகுதிகளை இறுதி செய்வோம். தேவேகவுடா, மைசூரு தொகுதியில் போட்டியிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம். மறைந்த அம்பரீசின் மனைவி சுமலதா என்னை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு மண்டியா தொகுதியில் டிக்கெட் வழங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் பா.ஜனதா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமராவார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    Next Story
    ×