search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரேவை சந்தித்தார் அமித் ஷா - கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பு
    X

    உத்தவ் தாக்கரேவை சந்தித்தார் அமித் ஷா - கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பு

    பாராளுன்ற தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மும்பையில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact
    மும்பை:

    மத்தியிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் பா.ஜனதா கூட்டணி அரசில் உள்ள சிவசேனா, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. 2019- பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனியாக போட்டியிடுவோம் என அவ்வப்போது கூறிவந்தன.

    ஆனால், அப்படி தனித்து போட்டியிட்டால் விபரீதமான விளைவு ஏற்படும் என இரு கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து இருந்தனர். இதனால், கூட்டணி அவசியம் என்ற நிலைக்கு இரு கட்சிகளும் தள்ளப்பட்டன,

    இதனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது.
      
    இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், பன்ட்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்னும் சிலமணி நேரத்தில் இரு தலைவர்களும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. 

    கடந்த 2014-பாராளுமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதில் பாஜக 23 தொகுதிகளையும், சிவசேனா 18 தொகுதிகளையும் பிடித்திருந்தது நினைவிருக்கலாம்.

    அதே ஆண்டில் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுக்கு பின்னர் அங்கு பாஜக ஆட்சி அமையை சிவசேனா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. #AmitShah #AmitShahmeetsUddhav #SenaBJPpact 
    Next Story
    ×