search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளம் பொதுக்கூட்டத்தில் தொலைபேசி மூலம் உரையாற்றிய யோகி ஆதித்யாநாத்
    X

    மேற்கு வங்காளம் பொதுக்கூட்டத்தில் தொலைபேசி மூலம் உரையாற்றிய யோகி ஆதித்யாநாத்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் லக்னோவில் இருந்து தொலைபேசி மூலம் உரையாற்றினார். #UPCM #Adityanath #Balurghatrally
    கொல்கத்தா:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. அம்மாநிலத்தை குறிவைத்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டவர்கள் பிரசார கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தெற்கு தினார் மாவட்டத்தில் உள்ள பலுர்கட் பகுதியில் இன்று பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம் முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், அவரது ஹெலிகாப்டர் இங்கு தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. பலுர்கட் பகுதியில் யோகி ஆதித்யாநாத் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் இன்று காலை முதல் திரளத் தொடங்கினர்.



    ஹெலிபேட் கிடைக்காததால் தனது பயணத்தை ரத்து செய்த யோகி ஆதித்யாநாத், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து தொலைபேசி மூலம் இந்த பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

    மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக தனது உரையில் குறிப்பிட்ட யோகி ஆதித்யாநாத், ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலத்தின் ஆட்சி தவறாக பயன்படுத்தப்படுவதை மம்தா ஊக்குவிக்க கூடாது என்றும் கூறினார்.

    அரசு அதிகாரிகள் ஆளும்கட்சி தொண்டர்கள் போல் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். #UPCM #Adityanath #Balurghatrally 
    Next Story
    ×