search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி பதவியேற்பு விழா - அகிலேஷ்-மாயாவதி, சந்திரசேகர ராவ், நவீன்பட்நாயக் புறக்கணிப்பு
    X

    குமாரசாமி பதவியேற்பு விழா - அகிலேஷ்-மாயாவதி, சந்திரசேகர ராவ், நவீன்பட்நாயக் புறக்கணிப்பு

    கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் அகிலேஷ் யாதவ், மாயாவதி, சந்திரசேகர ராவ் மற்றும் நவீன்பட்நாயக் ஆகியோர் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். #Kumarasamy #AkhileshYadav #Mayawati
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். தலைவர் குமாரசவாமி காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறார். இன்று மாலை பெங்களூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

    பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ்கட்சி, மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். ஆனால் அங்கு பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இந்த இரு கட்சி தலைவர்களும் கைக்கோர்த்து செயல்படும் நிலை உருவானது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவும், மாயாவதி கூட்டணி அமைத்து போட்டி போட்டு பா.ஜனதா வேட்பாளர்களை தோற்கடித்தார். ஆனாலும் இருகட்சி தலைவர்களும் இதுவரை ஒரே மேடையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.

    இந்த நிலையில் குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள். இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்ச்சியாகவே குமாரசாமியின் பதவியேற்பு விழா அமைய இருக்கிறது.

    பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. தனக்கு முக்கிய அரசு அலுவல் பணி இருப்பதால் நேற்றே அவர் பெங்களூர் வந்து தேவேகவுடாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றுவிட்டார்.


    இதேபோல் பா.ஜனதாவின் முன்னாள் கூட்டணி தலைவரான ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தேவேகவுடா தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரும் பதவி ஏற்பு விழாவுக்கு வரவில்லை. கடந்த ஜனவரி மாதம், நவீன் பட்நாயக் தனது தந்தை பிஜின் பட்நாயக் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தேவேகவுடாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை இதன்காரணமாக தற்போது தேவேகவுடா அமைப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. அவருக்கு பதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தி.மு.க. குழு பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். காவிரிக்காக கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவதற்காக முதல் அடியாகவே இதில் கலந்து கொள்வதாக கமல்ஹாசன் கூறினார். #KarnatakaFloorTest #Kumarasamy #AkhileshYadav #Mayawati #ChandrashekarRao #NaveenPatnaik
    Next Story
    ×