search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான அணி - ஆதரவு திரட்ட மம்தா டெல்லி பயணம்
    X

    பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான அணி - ஆதரவு திரட்ட மம்தா டெல்லி பயணம்

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான அணியை உருவாக்குவதற்காக ஆதரவு திரட்ட மம்தா பானர்ஜி டெல்லி செல்கிறார்.
    கொல்கத்தா:

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. மோடியின் வலிமையை குறைக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சோனியாகாந்தி கடந்த வாரம் விருந்து கொடுத்தார்.

    இந்த நிலையில சோனியாவை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் வரும் 27-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார்.

    சோனியா காந்தி அளித்த விருந்தில் கலந்து கொண்டதை போல இந்த விருந்திலும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கலந்த கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கும் மம்தா பானர்ஜி பா.ஜ.க.வுக்கு மாற்றாக பலமான எதிர் அணியை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

    முன்னதாக, தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ், நேற்று கொல்கத்தா நகரில் மம்தா பானர்ஜியை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்திச் சென்ற நிலையில், தனது டெல்லி பயணத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மம்தா சந்தித்துப்பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×