search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் மேல் - ப.சிதம்பரம்
    X

    ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் மேல் - ப.சிதம்பரம்

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் திரும்ப பெறப்பட்ட பணம் குறித்து தெளிவான விபரங்கள் தெரியாத நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் மேல் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். #CongressPlenarySession
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். மத்திய அரசின் பொருளாதார கொள்கை, காஷ்மீர் விவகாரம் ஆகியவற்றில் மோடி மீதான விமர்சனத்தை அவர் வெளியிட்டார். இதனை அடுத்து முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி அரசு பதவியேற்றதும் ஒரு வலுவான பொருளாதாரம் நாட்டில் இருந்தது. ஆனால், உலகப்பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பணமதிப்பிழப்பு என ஒரு மிகப்பெரிய பொய்யான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    எவ்வளவு பணம் திரும்ப வந்தது என்பதை இன்னும் ரிசர்வ் வங்கி சொல்ல மறுக்கிறது. இன்னும் பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கின்றது. ரிசர்வ் வங்கி கவர்னர் திருப்பதிக்கு சென்று உண்டியல் பணத்தை எண்ணுபவர்களை பார்க்க வேண்டும். ரிசர்வ் வங்கியை விட கோவில் பணியாளர்கள் வேகமாக பணம் எண்ணுவார்கள்

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 14 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். இது மன்மோகன் சிங்கின் சாதனை. ஆனால், பா.ஜ.க அரசு மக்களை வறுமையை நோக்கி தள்ளுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே வரும் நபர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. 

    இவ்வாறு அவர் பேசினார். #CongressPlenarySession #TamilNews
    Next Story
    ×