search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிசர்வ் வங்கி"

    • 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
    • 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று 2000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 8,202 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும்போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் மாத வணிக முடிவில் ரூ.8,202 கோடியாகக் குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.69 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை.

    மும்பை:

    2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வேறு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. பிறகு இந்த கால அவகாசம் அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை. அதாவது, 97.62 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன. .

    அந்த நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். அல்லது, எந்த தபால் நிலையத்திலும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி, தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
    • பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

    பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.

    தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.

    • ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும்.
    • 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. பின்னர் கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும். நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பணவீக்கம் இலக்கை நெருங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெப்போ வட்டி விகிதம் 6-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வீடு, வாகனம். மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை.

    • புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிப்பு.
    • தொடர்ந்து விதிமுறைகளை மீறியதால் தடை விதிக்கப்பட்டது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர். அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.


     

    வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.

    வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம். 

    • கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
    • வரும் 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கிடையே, 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வரும் திங்கட்கிழமை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பங்குச்சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • எந்த தபால் நிலையத்தில் இருந்தும் ‘இந்தியா போஸ்ட்’ மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

    மும்பை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, 97.38 சதவீத நோட்டுகள், வங்கிக்கு திரும்பி விட்டன.

    மீதி ரூ.9 ஆயிரத்து 330 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து செல்லுபடி ஆகும்.அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது எந்த தபால் நிலையத்தில் இருந்தும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.

    ரிசர்வ் வங்கி, எச்.எடி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி. வங்கிகளுக்கு நேற்று (டிசம்பர் 26) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான மின்னஞ்சலில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தாஸ், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மிரட்டல் தொடர்பாக குஜராத் மாநிலத்தை அடுத்த வதோதராவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வங்கிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் ஏமாற்று வேலை என்று தெரியவந்தது.

    • ரிசர்வ் வங்கி உள்பட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்:

    மும்பை:

    மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

    இதேபோல் மும்பையில் மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்:

    • பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் மாற்றி வருகின்றனர்.
    • அக்டோபர் முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ம் தேதி அறிவித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வந்தனர்.

    இதையடுத்து, அக்டோபர் 7-ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:

    கடந்த மே மாதம் வரை சுமார் 3.54 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. 97.26 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன எனவும், 2000 ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    • ரிஸ்க் வெயிட் காரணமாக வீட்டு கடன், கல்வி கடன், நகை கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
    • தற்போதைய நிலவரப்படி கடந்த செப்டம்பர் மாதம் வரை 2.17 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையாக கிரிடிட் கார்டுகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன் காரணமாக இந்த வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்காமலே ஆன்லைன் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனிநபர் கடன்களை தாராளமாக வழங்கி வந்தது.

    இதன் காரணமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் கடன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. தனிநபர்களை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு சிபில் அடிப்படையில் கடன் வேண்டுமா? என்று நச்சரிப்பதும். விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு எவ்வித ஆவணமும் இன்றி உடனே கடன் கொடுக்கும் நிலையும் உள்ளது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும் பொருளாதார ரீதியில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் நிதி இழப்புகள் ஏற்பட்டன.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கு உரிய ரிஸ்க் வெயிட் 100 சதவீதம் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பற்ற முறையில் தனி நபர்களுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்படும் மேலும் கடன் வழங்குவதற்காக வங்கிகள் வைத்திருக்கும் இருப்பில் 12 லட்சம் கோடி ரூபாய் வரை கட்டுப்படுத்தவும் இது ஏதுவாக அமையும்.

    தற்போது வழக்கமாக 100 ரூபாயில் 9 ரூபாய் தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கான மூலதனமாக வைப்பு வைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூலதன இருப்பு ரூ.11. 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதன் மூலம் வங்கிகள் தனி நபர்களுக்கு கடன் வழங்கும் திறனை கட்டுப்படுத்த எதுவாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    இந்த ரிஸ்க் வெயிட் காரணமாக வீட்டு கடன், கல்வி கடன், நகை கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அது வழக்கம் போல வழங்கப்படும் என்றும் இந்த கடன்களுக்காக ரிஸ்க் வெயிட் 100 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் மட்டுமே கூடுதலாக 25 சதவீதம் அதிகரித்துள்ளதால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இனிமேல் பெர்சனல் லோன் என்று அழைக்கப்படும் தனிநபர் கடன்களை வழங்குவதில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனி நபர்கள் கடன் வழங்குவதற்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் தெரியவரும்.

    இதன் காரணமாக தனிநபர் கடன்கள் வழங்குவது குறைக்கப்பட்டு மற்ற கடன் சேவைகள் கூடுதலாக கிடைக்க உரிய விதிமுறைகளை வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தீவிரமாக கண்காணிக்கும் படியும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக கிரெடிட் கார்டு வழங்குவதிலும் பல்வேறு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கடைபிடிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி கடந்த செப்டம்பர் மாதம் வரை 2.17 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையாக கிரிடிட் கார்டுகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்களின் அன்றாட சேவைகளில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த கிரெடிட் கார்டு வர்த்தகங்களையும் தீவிரமாக கண்காணித்து அதனையும் குறிப்பிட்ட இலக்குகளுடன் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் வருங்காலங்களில் கிரிடிட் கார்டு வழங்குவது மற்றும் அதில் உள்ள லிமிடேஜ் தொகை தொடர்பாகவும் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட மே 19-ந் தேதி, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    மும்பை:

    ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த மே 19-ந் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து வேறு மதிப்பு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியது.

    இப்படி மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30-ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் முடிந்தவுடன், நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நிலவரப்படி, 97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட மே 19-ந் தேதி, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அக்டோபர் 31-ந் தேதி நிலவரப்படி, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

    எனவே, 97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன.

    ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அங்கு நேரில் செல்ல முடியாதபட்சத்தில், இந்தியா போஸ்ட் தபால் நிலையங்கள் மூலம் நோட்டுகளை அனுப்பும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×