search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சி எப்போதும் வீழ்ச்சியை சந்திக்காது - தொண்டர்களிடம் சோனியா காந்தி ஆவேசம்
    X

    காங்கிரஸ் கட்சி எப்போதும் வீழ்ச்சியை சந்திக்காது - தொண்டர்களிடம் சோனியா காந்தி ஆவேசம்

    காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி எப்போதும் வீழ்ச்சியை சந்திக்காது என தொண்டர்களிடம் உறுதிபட தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சிறப்பு கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

    சவாலான நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

    காங்கிரஸ் கட்சி எப்போதும் வீழ்ச்சியை சந்தித்ததில்லை. முன்பும் சரி, வருங்காலத்திலும் சரி, எப்போதும் வீழ்ச்சி அடையாது. 

    மத்திய அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி பெற்ற வெற்றியை போல் மீண்டும் ஒரு வெற்றியை காங்கிரஸ் நிச்சயம் பெறும். அதற்கான தருணம் இப்போது அமைந்துள்ளது.
     
    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வலிமையை குறைத்து மதிப்பிட்டுள்ளார்கள். மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து பொய்யான வழக்குகளை போட்டு வருகிறது. ஆனாலும், மத்திய அரசின் ஊழல்களை தகுந்த ஆதாரத்துடன் நாங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவோம் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #Tamilnews
    Next Story
    ×