search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்கள் பலிகடா ஆக மாட்டோம்- தேமுதிக விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்
    X

    நாங்கள் பலிகடா ஆக மாட்டோம்- தேமுதிக விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தேமுதிக விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை எனக் கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். #MKStalin #LSPolls #DMDK
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பாராளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக பேசினார்.

    மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக்கு ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் கூறினார். மேலும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

    அப்போது, தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், தேமுதிக விவகாரம் பற்றி பொருளாளர் துரைமுருகன் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டதால், அதுபற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

    ஊடகங்கள் இந்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஸ்டாலின், பரபரப்பை ஏற்படுத்துவதற்காக கேட்கும் கேள்விகளுக்கு, நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டது  குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ஆவணத்தையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். #MKStalin #LSPolls #DMDK
    Next Story
    ×