search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவாரூர் தொகுதி தேர்தலில் திமுக வெற்றி பெற மதிமுக துணை நிற்கும்- வைகோ

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெறுவதற்கு ம.தி.மு.க. துணை நிற்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #DMK #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் தாயகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் அங்கு தி.மு.க. வேட்பாளர் நிறுத்தப்படுவார். யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் தி.மு.க. வெற்றிக்காக ம.தி.மு.க. பாடுபடும்.

    திருவாரூர் தொகுதியில் தி.மு.க.வுக்காக ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன். எங்கள் கட்சி தொண்டர்களும் தி.மு.க. வெற்றிக்காக அயராது உழைப்பார்கள்.


    இந்த தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெறும். அதற்கு ம.தி.மு.க. துணை நிற்கும்.

    எங்கள் இயக்கத்துக்கு என்னோடு இருந்து எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எண்ணற்ற தொண்டர்கள் உள்ளனர்.

    நாங்கள் நடத்திய ஈரோடு மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர். என் கட்சி பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அங்கு கூடிய தொண்டர்களின் கட்டுப்பாடு, ஒழுக்கத்தை பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது.

    இந்த தோழர்களை கொண்டு கட்சியின் கட்டுமான அடிப்படை வேலையை வலுப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

    ம.தி.மு.க. கட்சியின் அடித்தளத்தை 100 மடங்கு வலுப்படுத்தும் வேலையில் 3 மாதமாக ஈடுபட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளது. அத்தனை வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழு அமைக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்தோம். அதன்படி 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #DMK #MDMK #Vaiko
    Next Story
    ×