search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியலில் இன்னும் கமல் நிறைய கற்க வேண்டியுள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    அரசியலில் இன்னும் கமல் நிறைய கற்க வேண்டியுள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ

    கமல்ஹாசன் இன்னும் கற்றுக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #TNMinister #sellurRaju #KamalHaasan
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கமல் தூய்மையானவர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நடிப்பு உலகத்தில் அவர் சிறந்த கலைஞர், தமிழன், அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. உலகநாயகன் நடிப்பில் சிறந்த மேதை.

    ஆனால் அவரது வாழ்க்கையை பொறுத்தவரை தூய்மையானவர் இல்லை. இதுவரை எந்த மக்கள் பணியும் ஆற்றவில்லை.

    சினிமாவில் நடித்து விட்டு எல்லோரும் முதல்- அமைச்சராக வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. தமிழக மக்களுக்கு அவர் இதுவரை என்ன செய்தார்.


    நடிகர் வருகிறார் என்பதற்காகவும், அவர் வெள்ளைத்தோல் என்பதாலும் கூட்டம் கூடுகிறது.

    ஸ்டெர்ட்லைட் விவகாரத்தில் தமிழக அரசு சரியான நிலைப்பாட்டில் தான் உள்ளது என்று தெரிவித்தார்.

    பொதுமக்களை அனைத்து பகுதியிலும் சென்று பார்த்துவிட்டு அதற்குப் பிறகு கமல்ஹாசன் பேச வேண்டும். எங்கும் செல்லாமல் எங்கோ இருந்துகொண்டு அ.தி.மு.க. அரசு துருப்பிடித்த அரசு என்று கூறுவது சரியானது கிடையாது.

    அவர் குடும்ப வாழ்க்கையிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி நிறைவான எந்த ஒரு அரசியல் தலைவர் என்ற பணியையும் செய்யவில்லை. மக்கள் மையம் என்று ஆரம்பித்துவிட்டு அதிலிருந்து நிறைய அறிவாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மனம் புண்படும் வகையில் அவரது நடைமுறைகள் உள்ளதாக இருக்கிறது.

    அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் அவர் நடிப்பு உலகிற்கு செல்லட்டும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அரசியலுக்கு அவர் இன்னும் கற்றுக் கொண்டு வரவேண்டும். தமிழிசை சவுந்தரராஜன் எதிர்க்கட்சிகளை தான் குறை சொல்லி இருக்கிறார்

    நம்பிக்கைதான் வாழ்க்கை. நிவாரணப் பணிகளை தமிழக அரசு வேகமாகச் செய்து வருகிறது. பிரதமரை சந்தித்து முதலமைச்சர் புயலின் தாக்கத்தை பற்றியும் சேதாரம் குறித்தும் விளக்கமாக எழுதி கொடுத்துள்ளார்.

    பிரதமர் காலம் தாழ்த்தாமல் மத்தியகுழுவை அனுப்பி வைத்தார், மத்திய குழு அனைத்து பகுதியையும் பார்வையிட்டு சென்றனர். அவர்களிடம் மக்கள் தாங்கள் 25 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று விட்டதாகவும் அதை சமாளித்து வருவதற்கு இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ என்று கூறினர்.

    தமிழக அரசு யாருக்கும் அடிபணிந்து செல்ல வேண்டியது இல்லை நாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை மத்திய அரசின் திட்டங்களை பெறவும் நிவாரண தொகையை பெறுவதற்கும் சுமூகமாக சென்று வருகிறோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TNMinister #sellurRaju #KamalHaasan
    Next Story
    ×