search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்தபடம். அருகில் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க.மகளிர் அணி நிர்வாகிகள்.
    X
    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்தபடம். அருகில் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க.மகளிர் அணி நிர்வாகிகள்.

    தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது- ராமதாஸ்

    2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லாததால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை தொகுதி மற்றும் வேலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது :-

    இங்கு நடப்பது வித்தியாசமான பொதுக்கூட்டம். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்களிடம் படைக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என 3 சக்திகள் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.க.வை அழிக்கும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. அழிப்பதற்கு உங்களுக்கு எந்த ஆயுதமும் தேவை இல்லை. அனைவரிடமும் ஒரே ஒரு ஓட்டு என்கிற ஆயுதம் உள்ளது அது மட்டுமே போதுமானது.

    2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லை. இதனால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க.மட்டும்தான் உள்ளது. மதுக்கடைகளை அகற்றுவோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பா.ம.க.விற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்.


    அன்புமணி போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை ஒழிப்பதற்கு தான். அதற்காக பெண்கள் வாக்களிக்க வேண்டும். ரூ.200, ரூ.500 வாங்கி கொண்டு வாக்களிக்காதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, உயர்ந்த படிப்பு, விவசாயத்திற்கு பாதுகாப்பு, சிறந்த மருத்துவம் கிடைக்க பா.ம.க.விற்கு வாக்களியுங்கள். விவசாயத்தை, விவசாயியை பற்றி யாரும் பேசவில்லை. தாய், தந்தைக்கு அடுத்த தெய்வம் விவசாயிதான் என பாராளுமன்றத்தில் அன்புமணி பேசினார்.

    பால் போன்ற தண்ணீர் ஓடியதால் தான் இந்த ஆற்றிற்கு பாலாறு என பெயர் வந்தது. இதில் தோல் தொழிற்சாலை கழிவுநீரை விட்டு கெடுத்து விட்டனர். எனவே பாலாற்றை பாதுகாக்க 1996-ம் ஆண்டு வாணியம்பாடிக்கும் வாலாஜாவுக்கும் இடையே 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் சென்று பிரசாரம் நடத்தினேன். இன்று வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டமாகி உள்ளது. இந்த மாவட்டத்திற்காக பா.ம.க. நிறைய பாடுபட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 2 தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது சாதனை.

    இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss
    Next Story
    ×