search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு மெத்தனமாக உள்ளது- துரைமுருகன்
    X

    மத்திய அரசு மெத்தனமாக உள்ளது- துரைமுருகன்

    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளதாக சேலத்தில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். #DMK #DuraiMurugan #CauveryIssue
    ஓமலூர்:

    சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தி.மு.க-வின் முதன்மை செயலாளர் துரை முருகன், சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மெத்தமான அரசு, அவர்கள் தமிழகத்தில் எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது. தென்னகத்தில் அவர்களுக்கு ஆதரவாக உள்ள மாநிலம் கர்நாடகா தான். அதை இழக்ககூடாது என்று காவிரி விவகாரத்தில் மெத்தனம் காட்டுகின்றனர்.


    இது அரசியல் சுயநலம் ஆகும். ஒரு பெரிய பாரத கண்டத்தை ஆளும் எண்ணம் மோடி அரசுக்கும், மோடிக்கும் இல்லை. அதனால் தமிழகத்தை முழுமையாக புறக்கணித்து வருகின்றனர். மத்திய அரசை வற்புறுத்தி பணிய வைக்கிற அதிகாரம், ஆற்றல், தகுதி, தைரியம் மாநில அரசுக்கு கிடையாது.

    மாநில அரசு மத்திய அரசுக்கு அடிமை, பினாமி அரசாக செயல்பட்டு வருகிறது. இவர்களின் குறிக்கோள் பணம் வசூலிப்பது மட்டுமே, ஆகையால் அவர்களின் விருப்பம் போல் நடந்து கொள்கின்றனர். பாவம் ஆளுநரின் நிலைமை ஒரு பரிதாபத்திற்கு உரியது. ஒரு ஆளுனருக்கு இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது. பா.ஜ.க-வின் எச்.ராஜாவை அரசியல்வாதியாக கருதவில்லை, மனித தன்மை உள்ளவராக கருதவில்லை. ஒரு அடிமட்ட தொண்டரும் பேசக்கூடாத வார்த்தைகளை பேசும்போது அவரை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கும் தேர்தல் வருமா என்ற கேள்விக்கு நான் தேர்தல் கமி‌ஷன் இல்லை என்றார். #DMK #DuraiMurugan #CauveryIssue
    Next Story
    ×