என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ அறிக்கை
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் ஒட்டுமொத்தத் தமிழகமும் பொங்கி எழுந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் வேறெந்தப் பிரதமரும், எந்த மாநிலத்திலும் சந்திக்காத எதிர்ப்பை ஏப்ரல் 12-ந் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொண்டார்.
தமிழர் இல்லம் தோறும் கருப்புக் கொடிகள் பறந்தன. தலைநகர் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; “பிரதமர் மோடியே திரும்பிச் செல்லுங்கள்” என்று இளைஞர் பட்டாளம் எழுப்பிய இடிமுழக்கம் டெல்லி செங்கோட்டை வரை எதிரொலித்தது. காவிரியில் நமது உரிமை நிலைநாட்டப்படும் வரையில் ஓயாத கடல் அலைகளென தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஏப்ரல் 16-ந்தேதி தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ந்தேதி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏப்ரல் 23 (திங்கள்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனிதச் சங்கிலி அறப் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடமை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சகர் கூட்டம் நடுங்க, உரிமைப் போராட்டக் களத்தில் ஒட்டு மொத்தத் தமிழினமும் ஒருசேர அணி திரண்டது என்பதை நிரூபிக்க வீதிக்கு வாருங்கள் தமிழர்களே! என்று அழைக்கிறேன். தமிழக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வர்த்தக பெருமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஏப்ரல் 23-ல் நடைபெறும் மனிதச் சங்கிலியில் கைகோர்த்து அறப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #tamilnews #vaiko #cauveryissue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்