search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய போலீசார் - வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு
    X

    வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய போலீசார் - வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு

    திசையன்விளையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய போலீசாரின் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள குஞ்சன்விளையைச் சேர்ந்தவர் முருகன். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முருகன் மற்றும் அவரது மகள் கடையில் இருந்தனர். அப்போது உவரியைச் சேர்ந்த 2 போலீசார் முருகனின் கடைக்கு வந்தனர். அவர்கள் முருகனிடம் உனது கடையில் மது வைத்து விற்பதாக புகார் வந்துள்ளது. எனவே உனது கடையில் சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர்.

    இந்தவேலையில் முருகனின் உறவினர் சதீஷ்குமார் என்பவர் அங்கு வந்தார். அவரிடமும் போலீசார் உன் வீட்டிலும் மதுபதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. உன் வீட்டையும் சோதனை செய்யவேண்டும். என கூறியவாறு அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். செல்லும் வழியில் மாமூல் கேட்டு போலீசார் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    மேலும் போலீசார் எங்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் முருகனின் கடையில் வைத்து மது விற்றதாக வழக்கு போடுவோம் என்றும் கூறியுள்ளனர். இதை சதீஷ்குமார் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.

    இந்த சம்பவம் உவரி, திசையன்விளை பகுதிகளில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாருக்கும் புகார் சென்றுள்ளது. அவர் ரகசியமாக இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×