search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோவில் நகரின் பொன்விழா - பிரதமர் மோடி 24-ம் தேதி புதுச்சேரி வருகை
    X

    ஆரோவில் நகரின் பொன்விழா - பிரதமர் மோடி 24-ம் தேதி புதுச்சேரி வருகை

    பிரதமர் நரேந்திர மோடி 16 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 24-ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளதாக புதுவை பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். #pmmodi #puducherry
    புதுவை:

    மத்திய அரசால் புதுச்சேரி சட்டசபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான புதுவை பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    கடந்த 2001-ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்திருந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக வரும் 24-ம் தேதி புதுவைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


    புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களில் ஐம்பது சதவீதம் பேர் ஊழல்வாதிகள் என்று குறிப்பிட்ட அவர் இவர்களின் பிடியில் இருந்து புதுவை அரசை விடுவிக்க மக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரியின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜிப்மர் மருத்துவமனையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை உருவாக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி மற்றும் துறைமுகத்தின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு துணையாக உள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

    மத்திய அரசின் நிதியை உரிய முறையில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள தவறிய நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    வரும் 24-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் நகரின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக புதுவைக்கு வரும் பிரதமேர் நரேந்திர மோடி லாஸ்பேட் பகுதியில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    புதுச்சேரி மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாக தேவையான ஆதாரங்களுடன் அப்போது பிரதமர் மோடியிடம் புகார் அளிப்போம் என்றும் சாமிநாதன் தெரிவித்துள்ளார். #tamilnews #pmmodi #puducherry
    Next Story
    ×