என் மலர்
நீங்கள் தேடியது "லாஸ்பேட்டை"
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் வாணிதாசன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 47). நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சரஸ்வதியை ஆறுமுகம் அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு முகத்தை தேடி வந்தனர்.
ஆறுமுகம் இன்று காலை முத்தியால் பேட்டை சாராயக்கடையில் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசில் அவர் வாக்கு மூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:-
நான் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தேன். அதே நேரத்தில் என்னால் குடிக்காமல் இருக்க முடியாது. எனவே, குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் தொல்லை கொடுத்து வந்தேன்.
இதனால் என்னை அவர் மதிப்பதில்லை. அதே போல் நேற்று முன்தினம் இரவும் குடிக்க பணம் கேட்டேன். என்னை அவமதிக்கும் வகையில் திட்டினார். அதன் பிறகு இருவரும் படுத்து விட்டோம்.
இருந்தாலும் என்னை அவர் அவமதித்ததால் எனக்கு அத்திரம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது இரும்பு தடியால் தாக்கினேன். இதில் மண்டை உடைந்து ரத்தம் வந்தது.உடனே பயந்து போன நான் அங்கிருந்து சென்று விட்டேன். இரும்பு தடியை சாந்தி நகரில் வீசினேன். பின்னர் அங்கிருந்து முத்தியால் பேட்டை சென்று தலைமறைவாக இருந்தேன்.அப்போது போலீ£ர் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் அரவிந்த் (வயது 25). இவர் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.
சிவசுப்பிரமணியனுக்கு புதுவை லாஸ்பேட்டை குமரன் நகரில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு கல்லூரி விடுமுறை நாட்களில் அரவிந்த் வந்து தங்கி செல்வது வழக்கம்.
அதுபோல் நேற்று முன்தினம் நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் அரவிந்த் புதுவைக்கு வந்தார். நேற்று காலை நண்பனின் பிறந்த நாளில் பங்கேற்று விட்டு குமரன் நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுக்க செல்வதாக நண்பர்களிடம் கூறி விட்டு அரவிந்த் வந்தார்.
மாலையில் அனைவரும் ஜவுளி கடைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் வெகுநேரமாக அரவிந்த் வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் குமரன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டில் மின் விசிறியில் நைலான் கயிற்றால் அரவிந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வழக்கு பதிவு செய்து அரவிந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews






