search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமிநாதன்"

    • தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாக பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை.
    • இந்த நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.


    தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் ஏராளமான செயல் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளும் செய்தியாளர்களுக்கான நலனில் தேவைப்படும் செயல் திட்டங்களும் கூடிய விரைவில் முதலமைச்சர் ஆலோசனைபடி நிறைவேற்ற தேவையானதை செய்வோம் என்றார்.

    • அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பயிற்சி கூடங்களை பார்வையிட்டு, கட்டிட வசதி, ஆசிரியர் பற்றாக்குறை, விடுதி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூரில் 99 ஏக்கர் நிலத்தில் திரைப்பட நகரம் உருவாக உள்ளது., அங்கு ஏற்கனவே இரண்டு பிரமாண்ட படப்பிடிப்பு தளம் தயாராகி, படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தொடர்ந்து சினிமா, சின்னத்திரை நடிகர்கள், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்டப்பட உள்ளதால் அந்த பகுதிகளை தமிழக கலை, பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துடன் சென்று பார்வையிட்டார்.

    முன்னதாக மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கல்,உலோகம், சுதை, மரம், மெழுகு, பெயிண்டிங் உள்ளிட்ட பிரிவுகளின் பயிற்சி கூடங்களை பார்வையிட்டு, கட்டிட வசதி, ஆசிரியர் பற்றாக்குறை, விடுதி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, கலை, பண்பாட்டுத்துறை ஆணையர் சுகந்தி, திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, கல்லூரி முதல்வர் ராமன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், திருப்போரூர் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பையனூர் சேகர், காஞ்சிபுரம் வடக்கு தி.மு.க மாவட்ட பொருளாளர் விசுவநாதன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார்.
    • அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பகுதி நேர வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    வடவள்ளி:

    கோவை பேரூர் பகுதியில் உள்ள சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ் கல்லூரியில் நிமிர்வு கலையகம் மற்றும் பேரூர் ஆதின கல்வி நிறுவனங்கள் சார்பில் உலகப்பொது பறை மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்லிசை கருவிகளையும் பார்வையிட்டு, இசைத்து பார்த்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இசையை வளர்த்து வந்துள்ளனர்.

    பறை போன்ற இசைக் கருவிகளை கொண்டு தான் மன்னர்களே பொது மக்களுக்கு செய்திகளை தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

    அந்த காலத்தில் கோவில் நிகழ்ச்சிகளிலும், சுப நிகழ்ச்சிகளிலும் இந்த கருவி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    எனவே இது போன்ற நமது கலாசார கலை பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். அதற்கான முன்னெடுப்பை தற்போது நமது முதலமைச்சர் செய்து வருகிறார்.

    இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும். மேலும் பண்டைய காலத்தில் தமிழர்களிடமிருந்த இசைக் கருவிகள், பண்பாடு கலாச்சாரம் ஆகியவை மீட்டெடுக்கப்பட வேண்டும்.

    இசை கல்லூரிகளில் கிராமிய கலை ஆசிரியர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பகுதி நேர வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×