search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இசை கல்லூரிகளில் விரைவில் கிராமிய கலை ஆசிரியர்கள் நியமனம்- அமைச்சர் பேட்டி
    X

    அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்து பறை இசைத்த காட்சி

    இசை கல்லூரிகளில் விரைவில் கிராமிய கலை ஆசிரியர்கள் நியமனம்- அமைச்சர் பேட்டி

    • மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார்.
    • அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பகுதி நேர வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    வடவள்ளி:

    கோவை பேரூர் பகுதியில் உள்ள சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ் கல்லூரியில் நிமிர்வு கலையகம் மற்றும் பேரூர் ஆதின கல்வி நிறுவனங்கள் சார்பில் உலகப்பொது பறை மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்லிசை கருவிகளையும் பார்வையிட்டு, இசைத்து பார்த்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இசையை வளர்த்து வந்துள்ளனர்.

    பறை போன்ற இசைக் கருவிகளை கொண்டு தான் மன்னர்களே பொது மக்களுக்கு செய்திகளை தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

    அந்த காலத்தில் கோவில் நிகழ்ச்சிகளிலும், சுப நிகழ்ச்சிகளிலும் இந்த கருவி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    எனவே இது போன்ற நமது கலாசார கலை பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். அதற்கான முன்னெடுப்பை தற்போது நமது முதலமைச்சர் செய்து வருகிறார்.

    இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும். மேலும் பண்டைய காலத்தில் தமிழர்களிடமிருந்த இசைக் கருவிகள், பண்பாடு கலாச்சாரம் ஆகியவை மீட்டெடுக்கப்பட வேண்டும்.

    இசை கல்லூரிகளில் கிராமிய கலை ஆசிரியர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பகுதி நேர வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×