search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saminathan"

    • தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாக பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை.
    • இந்த நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.


    தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் ஏராளமான செயல் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளும் செய்தியாளர்களுக்கான நலனில் தேவைப்படும் செயல் திட்டங்களும் கூடிய விரைவில் முதலமைச்சர் ஆலோசனைபடி நிறைவேற்ற தேவையானதை செய்வோம் என்றார்.

    • சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    • முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜனதா கட்சி உழவர்கரை மாவட்ட தலைவர் பிரபாகரன் ஏற்பாட்டில் மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன், கோபதி முன்னிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் இளைஞர் அணி நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர்.

    முகாமை மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் இளைஞர் அணி மாநில துணை தலைவர் ராக் பேட்ரிக் பொதுச் செயலாளர் வேல்முருகன் உழவர்கரை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் விஜயகுமார், செயலாளர்கள் ஹரிஷ், ஜோசப், விமல், பாலாஜி, அசோக் குமார், சரவண ராஜன், சிவகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர் நவீன் குமார் இந்திராநகர் இளைஞரணி தலைவர் ஸ்டீபன் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆவேசம்
    • அரசு அதிகாரியின் பணிகளில் தோய்வு மற்றும் தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது என்பது மக்கள் வரிப்பணம் மற்றும் நேரம் வீணாக்குவதற்கு சமம்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை தரக்கூடியது. நாட்டு நளினில் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்திய நாட்டுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு வருகிறது. சுமார் 60 ஆயிரம் கோடி மக்களுடைய வரி பணம் இதன் மூலம் மிச்சப்படுத்துகிறது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து வருகின்றனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மீது கூறும் குற்றச்சாட்டுகளால் தொலைநோக்கு பார்வையில் தொடர்ந்து தேர்தல் நடப்பதால் மாணவர்களுடைய படிப்பு, பொதுமக்களுடைய சிரமம், மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு. அரசு அதிகாரியின் பணிகளில் தோய்வு மற்றும் தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது என்பது மக்கள் வரிப்பணம் மற்றும் நேரம் வீணாக்குவதற்கு சமம்.

    இதை அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஒரே தேர்தல் ஒரே நாடு என்ற ஆதரிக்க வேண்டும்

    ஆரம்பகாலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் இரண்டுமே ஒன்றாக நடந்தது அனைவரும் அறிவர். பாரதிய ஜனதா கட்சி எந்த கருத்தை சொன்னாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு கொண்டுள்ளதை புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்
    • தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் ஏழை- எளிய மாணவர்களின் நலன்கருதி 50 சதவீத இடஒதுக்கீடு அரசுக்கு அளிக்க முன்வர வேண்டும்.

    கடந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அப்போது இடஒதுக்கீடு பற்றி பேசாதவர்கள் தற்போது பேச காரணம் என்ன? தேர்தல் சமயத்தில் இடஒதுக்கீடு பற்றி பேசவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விமர்சிக்கவும் காங்கிரசுக்கு எந்த அருகதையும் இல்லை.

    புதுவையில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள்.

    எனவே ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி பா.ஜனதா சார்பில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற மத்திய அமைச்ச ருக்கு கோரிக்கை மனு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது
    • புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி ச கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பாரத தேசத்தின் 77-வது சுதந்திர தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் போர் நினைவுச் சின்னம் அமைய உள்ள பணிக்கு புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வீர வாஞ்சிநாதன் சுதந்திர போர் பயிற்சி பெற்ற புகழ்மிக்க இடமான புதுச்சேரி காலாப் பட்டு ெதாகுதிக்குட்பட்ட கருவடி குப்பம் அய்யனார் கோவில் பகுதியில் டெல்லியில் அமைய உள்ள போர் நினைவுச் சின்னத்திற்காக புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி ச கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை யில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், ஊடகப்பிரிவு மாநில அமைப் பாளர் குருசங்கரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலா ளர்கள் வேல்முருகன், அமல்ராஜ் இளைஞர் அணி துணைத்தலைவர் ராக் பேட்ரிக், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனக வல்லி, காலாப்பட்டு, லாஸ்பேட் தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் ஆனந்தராஜ், பா.ஜனதா நிர்வாகிகள் அருண் தனசேகர், ராஜேஷ், முன்னாள் ராணுவ வீரர் சசிகுமார் உள்பட காலப்பட்டு மற்றும் லாஸ்பேட் பகுதியில் உள்ள பா.ஜனதா மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் 100-க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில பா.ஜனதா கட்சி வல்லுனர் பிரிவு அமைப்பாளர் பொறியா ளர் ஆசிர்வாத் ரமேஷ் செய்திருந்தார்.

    • கூட்டணி அரசின் 10 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
    • ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஏழை மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக திகழ்ந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனையாகும். 50 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகள், அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றங்கள் பற்றி சிந்திக்கவில்லை

    மேலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் தற்போது அரசுப் பள்ளி யில் படிக்கும் மாண வர்களின் கல்வி தரம் உயர வேண்டும் என்பதற்காக ஏற்கனவே சிபிஎஸ்சி பாடத் திட்டத்தை தாய்மொழியில் கல்வி கற்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் மேலும் ஒரு வாய்ப்பாக புதுவையில் தேசிய ஜனநாயக அரசு 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு அளித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பது அரசு பள்ளி யின் மீது பொதுமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

    அரசுப் பள்ளியில் படித்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் வகிக்கின்ற நிலையில், புதுவை கூட்டணி அரசின் 10 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். போன்ற உயர்கல்வி படிப்பினை ஏழை எளிய மாணவர்கள் அடைந்திட இது வழிவகுக்கும். ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஏழை மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக திகழ்ந்து வருகிறது.

    எதிர்காலத்தில் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர நம்பி க்கையை ஏற்படுத்தும் இந்த முடிவை எடுத்த அரசுக்கு பள்ளி மாணவர்கள் சார்பாகவும் பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
    • தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து பா.ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநில தலைவர் சாமிநாதன் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு ஸ்தாபன தின விழா பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனை மாநில தலைவர் சாமிநாதன் பா.ஜனதா நிர்வாகிகளுடன் கேட்டார்.

    நிகழ்ச்சியில், அலுவலக செயலாளர் கவுரிசங்கர், மாநில செயலாளர் ஜெயந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், வல்லுனர் பிரிவு மாநில அமைப்பாளர் ஆசிர்வாத ரமேஷ், இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர், மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, ஓ.பி.சி. அணி செயலாளர் சீனிவாச பெருமாள், லாஸ்பேட் தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, மாவட்ட துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து பா.ஜனதா கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநில தலைவர் சாமிநாதன் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    இதேபோல் ஸ்தாபன தினத்தை மாநிலம் முழுவதும் அவரவர் தொகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள்.

    • முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் நடத்துவதாக போலி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
    • 9 ஆண்டாக ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உலகிற்கே ஒரு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது. மத்திய, மாநில அரசை குறை சொல்லும் தகுதி நாராயணசாமிக்கு இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் நடத்துவதாக போலி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

    புதுவை மாநிலத்தை காக்கும் சக்தி காங்கிரஸ் கட்சி என்கிறார். 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து புதுவையை அழித்த கட்சி காங்கிரஸ். தனி கணக்கு ஆரம்பித்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி புதுவை மாநிலத்தை அழிவு பாதைக்கு எடுத்துச்சென்றது.

    பல ஆண்டுகளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை

    கேள்விக்குறியாக்கிய பெருமை நாராயணசாமி யைத்தான் சேரும்.

    9 ஆண்டாக ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உலகிற்கே ஒரு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது. மத்திய, மாநில அரசை குறை சொல்லும் தகுதி நாராயணசாமிக்கு இல்லை.

    உலக நாடுகளின் பொருளாதார நிலையில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. எனவே நாராயணசாமியின் போலியான நாடகம் மற்றும் வார்த்தைகள் புதுவை மாநில மக்களிடம் எடுபடாது. இன்னும் 50 ஆண்டுகள் நாராயணசாமியும், காங்கிரஸ் கட்சியும் கனவு மட்டுமே காண வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
    • இக்கூட்டத்தில், பா.ஜனதா மாநில தலைவர் பேசும்போது வருகிற 16 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைக ளிலும் கூட்டம் நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். செல்வகணபதி

    எம்.பி., பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜனதா நிர்வாகிகள் தங்க. விக்ரமன், செல்வம், முருகன், அருள்முருகன் மற்றும் மாநில செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.

    இக்கூட்டத்தில், பா.ஜனதா மாநில தலைவர் பேசும்போது வருகிற 16 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைக ளிலும் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மாத தோறும் நடைபெறும் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் உள்ள அனைவரும் பார்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏழைகளின் வளர்ச்சிக்காக வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
    • ஏழை மக்களுக்கு மிகவும் பயன ளிக்கக்கூடிய வகையிலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய முறையில் பட்ஜெட் தயாரித்து வழங்கி உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏழைகளின் வளர்ச்சிக்காக வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏழை மக்களுக்கு மிகவும் பயன ளிக்கக்கூடிய வகையிலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய முறையில் பட்ஜெட் தயாரித்து வழங்கி உள்ளார்.

    கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு துறையை தனியாக பிரித்து, தனி துறை உருவாக்கப்படும். தீயணைப்பு துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    புதுவையில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் எனவும், கடற்கரையில் மிதக்கும் படகுத்துறை அமைக்கப்படும் என்பது உட்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

    50 புதிய பஸ்கள் வாங்க ரூ.25 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்களுக்கான சிறப்பான பட்ஜெட்டை வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பா.ஜனதா நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×