என் மலர்
புதுச்சேரி

ரத்ததான முகாமை புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பா.ஜனதாவினர் ரத்ததானம்
- சாமிநாதன் தொடங்கி வைத்தார்
- முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜனதா கட்சி உழவர்கரை மாவட்ட தலைவர் பிரபாகரன் ஏற்பாட்டில் மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன், கோபதி முன்னிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் இளைஞர் அணி நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர்.
முகாமை மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் இளைஞர் அணி மாநில துணை தலைவர் ராக் பேட்ரிக் பொதுச் செயலாளர் வேல்முருகன் உழவர்கரை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் விஜயகுமார், செயலாளர்கள் ஹரிஷ், ஜோசப், விமல், பாலாஜி, அசோக் குமார், சரவண ராஜன், சிவகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர் நவீன் குமார் இந்திராநகர் இளைஞரணி தலைவர் ஸ்டீபன் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.