search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கருவடிக்குப்பம் அய்யனார் கோவில் பகுதியில் புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி
    X

    புனித மண் எடுக்கும் நிகழ்ச்சியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

    கருவடிக்குப்பம் அய்யனார் கோவில் பகுதியில் புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது
    • புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி ச கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பாரத தேசத்தின் 77-வது சுதந்திர தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் போர் நினைவுச் சின்னம் அமைய உள்ள பணிக்கு புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வீர வாஞ்சிநாதன் சுதந்திர போர் பயிற்சி பெற்ற புகழ்மிக்க இடமான புதுச்சேரி காலாப் பட்டு ெதாகுதிக்குட்பட்ட கருவடி குப்பம் அய்யனார் கோவில் பகுதியில் டெல்லியில் அமைய உள்ள போர் நினைவுச் சின்னத்திற்காக புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி ச கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை யில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், ஊடகப்பிரிவு மாநில அமைப் பாளர் குருசங்கரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலா ளர்கள் வேல்முருகன், அமல்ராஜ் இளைஞர் அணி துணைத்தலைவர் ராக் பேட்ரிக், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனக வல்லி, காலாப்பட்டு, லாஸ்பேட் தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் ஆனந்தராஜ், பா.ஜனதா நிர்வாகிகள் அருண் தனசேகர், ராஜேஷ், முன்னாள் ராணுவ வீரர் சசிகுமார் உள்பட காலப்பட்டு மற்றும் லாஸ்பேட் பகுதியில் உள்ள பா.ஜனதா மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் 100-க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில பா.ஜனதா கட்சி வல்லுனர் பிரிவு அமைப்பாளர் பொறியா ளர் ஆசிர்வாத் ரமேஷ் செய்திருந்தார்.

    Next Story
    ×