என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வருகிற 7-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Byமாலை மலர்4 Aug 2017 5:44 AM GMT (Updated: 4 Aug 2017 5:45 AM GMT)
`விவேகம்' படத்தின் ரிலீசுக்கு முன்பாக தல அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்க `விவேகம்' படக்குழு முடிவு செய்திருக்கிறது.
சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'விவேகம்'. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்தது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் ரீலீசுக்கு முன்பாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாடல் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற 7-ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இசை வெளியீட்டு முன்னதாக படத்தில் இடம்பெறும் 7 பாடல்களுக்கான ப்ரிவ்யூ வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த ப்ரிவ்யூ வீடியோ வைரலாக பரவி வருகிறது. "ஏ.கே. தீம் மியூசிக்", "நெவர் கிவ் அப்", "காதலடா ரிப்ரைஸ்", "வெறியேற", "காதலாட", "தலை விடுதலை", "சர்வைவா" உள்ளிட்ட 7 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன.
அக்ஷரா ஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், ஆரவ் சவுத்ரி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

விவேகம் இசை வெளியீடு விவேகம் தல தல அஜித் அஜித் அஜித்குமார் சர்வைவா தலை விடுதலை காஜல் அகர்வால் விவேக் ஓபராய் அக்ஷரா ஹாசன் தணிக்கை குழு யு சான்றிதழ் இன்ப அதிர்ச்சி Vivegam Vivegam Third song Kadhalaada Kabilan Vairamuthu Anirudh Siva Pradeep Kumar Sasha Tripathi Thala Thala Ajith Ajith Surviva thalai viduthalai Kajal Agarwal Vikak Oberoi Akshara Hassan vivegam audio release
Next Story
×