என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`விவேகம்' ரிலீஸ் நாளுக்கும், அஜித்தின் வெற்றிக்கும் இடையேயான தொடர்பு
Byமாலை மலர்1 Aug 2017 11:55 AM GMT (Updated: 1 Aug 2017 11:55 AM GMT)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ``விவேகம்'' படத்தின் ரிலீஸ் தேதிக்கும் அஜித்தின் வெற்றிக்கும் சம்பந்தப்பட்ட ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.
`விவேகம்' படத்தின் தணிக்கைக்குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி தான் டுவிட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியிருக்கும் `விவேகம்' படத்திற்கு தணிக்கைக் குழு `யு/ஏ' சான்றிதழை வழங்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
`விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதிக்கும், அஜித்தின் வெற்றிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால், `விவேகம்' படம் விநாயகர் சதுர்த்திக்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக தல அஜித் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான `மங்காத்தா' படமும் விநாயகர் சதுர்த்திக்கு ஒருநாள் முன்பாக (ஆகஸ்ட் 31-ம் தேதி) ரிலீஸ் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் `விவேகம்' படமும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான கொண்டாட்டங்களை அஜித் ரசிகர்கள் தற்போதே தொடங்கிவிட்டனர்.

மங்காத்தா விவேகம் தல தல அஜித் அஜித் அஜித்குமார் சர்வைவா தலை விடுதலை காஜல் அகர்வால் விவேக் ஓபராய் அக்ஷரா ஹாசன் தணிக்கை குழு யு சான்றிதழ் இன்ப அதிர்ச்சி Vivegam Vivegam Third song Kadhalaada Kabilan Vairamuthu Anirudh Siva Pradeep Kumar Sasha Tripathi Thala Thala Ajith Ajith Surviva thalai viduthalai Kajal Agarwal Vikak Oberoi Akshara Hassan mankatha
Next Story
×