search icon
என் மலர்tooltip icon

    தஜிகிஸ்தான்

    • ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
    • ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

    தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவானது.

    துஷான்பே:

    மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

    இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜிஜாங்:

    தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    இதே போல தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கடியில் 150 கிலோ மீட்டர் ஆழத்தில் இது உருவானது. ரிக்டர் அளவு கோலில் இது 4.1 ஆக பதிவாகி இருந்தது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ×