search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர் விபத்து"

    • விபத்து நடந்த பகுதிக்கோ அருகில் உள்ள கிராமத்திற்கோ வாகனங்கள் செல்வதற்கான சாலை வசதி இல்லை
    • விபத்து குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்

    கவுகாத்தி:

    அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மிக்கிங் கிராமத்தின் அருகே மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அத்துடன் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது.

    தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதிக்கோ அருகில் உள்ள கிராமத்திற்கோ வாகனங்கள் செல்வதற்கான சாலை வசதி இல்லை. அதனால் ராணுவம் மற்றும் விமானப்படையின் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்களில் அப்பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணிக்கு உதவினர். விபத்து நடந்த பகுதியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. அவரை தேடும் பணி நடைபெறுகிறது.

    ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு தொடர்பாக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, விபத்து நடந்த பகுதியில் இருந்து புகை வெளியேறும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அருணாச்சல பிரதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பைலட் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

    • தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
    • ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.

    தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. சிங்கிங் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

    தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது.
    • இந்த விபத்தில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

    பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

    இதில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். முந்தைய ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களை தலிபான்கள் கைப்பற்றி பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    தலைநகர் காபூலில் நடந்த இப்பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 3 தலிபான்கள் உயிரிழந்தனர்.

    • பழுதடைந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்றன.
    • அமெரிக்க ஹெலிகாப்டர்களை தலிபான்கள் பயன்படுத்தி வந்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய அமெரிக்க படைகளில் பழுதடைந்த தங்களுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுச் சென்றன. அவற்றை கைப்பற்றிய தலிபான் படையினர் பயன்படுத்தி வந்தனர்.

    தலைநகர் காபூலில் இன்று அமெரிக்க தயாரிப்பு ஹெலிகாப்டர் மூலம் தலிபான் படை வீரர்கள் சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொருங்கியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாகவும், மேலும் அதில் இருந்த 5 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    செக் குடியரசுவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Helicoptercrash
    ப்ராக்:

    மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பில்சன் எனும் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பில்சன் நகரில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். #Helicoptercrash
    ×