search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீதிஉலா"

    • பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நா யகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.

    நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சுவாமிகள் தனி தனி சன்னதில் அருள் பாலிக்கின்றனர்.

    இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இவ்விழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று பஞ்சமூர்த்திகள் தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடை பெற்றது.

    கார்த்திகை மண்டபத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகாதீபாராதனை உடன் வீதியுலா துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

    முன்னதாக திரளான பக்தர்கள் கும்மியடித்து விழாவை கொண்டாடினர்.

    வைத்தீஸ்வரன் கோவில் பொதுமக்கள், பக்தர்கள், குலதெய்வ வழிபாட்டினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

    • முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு வீதிஉலா காட்சி நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே திருவையாறு அடுத்த வீரசிங்கப்பட்டியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டுதல் பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லாக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது. மாரியம்மன் பூ அலங்காரத்துடன் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதேபோல் கருப்புசாமி, மதுர வீரன் , நொண்டி கருப்பு ஆகிய பரிவார தெய்வங்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய வீதிகளில் வழியாக பல்லாக்கு வீதி உலா சென்று மீண்டும் சன்னதியை வந்தடைந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • நாளை காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • 6-ம்நாள் யானை வாகனத்தில் சாமி வீதியுலா.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கி–ரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜை களுடன் தொடங்குகிறது.

    நாளை (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    இவ்விழாவினை–யொட்டி நாளை முதல் தினசரி காலை மங்கல இன்னிசை முழங்க சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கிலும், மாலை வேளைகளில் 1- ம் திருநாள் இந்திர விமானம், 2-ம்நாள் சூர்யப்ரபை, 3-ம்நாள் சேஷ வாகனம், 4-ம் திருநாள் மின் விளக்குகள் ஒளிர ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5-ம் நாள் அனுமந்த சேவையும், 6- ம்நாள் யானை வாகனத்திலும், 7-ம் திருநாள் கோரதம் மற்றும் புன்னைமரம் வாகனங்களிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்துடனும் வீதிஉலா நடைபெறும்.

    9-ம் திருநாள் காலை 8 மணிக்கு மேல் தேரோட்டமும்,

    10-ம் திருநாள் சப்தாவர்ண விழாவும், மறுநாள் (ஏப்ரல்.1) விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.

    மேலும் இவ்விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் பஞ்சராத்திர ஆகம பகவத் சாஸ்திரப்படி யாகசாலை பூஜை ஹோமமும், பூர்ணாஹீதியும் வேதபாராயண மத்ராமாயணம், திவ்யப்பிரபந்த பாராயணங்கள் சேவை சாற்று முறையும் மற்றும் வருகிற 29-ந் தேதி வரை கோவில் வளாகத்தில் தினசரி மாலை மருத்துவர் வெங்கடேஷ் பாசுரபடி ராமாயணம் உபன்யாசமும் நடைபெற உள்ளது.

    இவ்விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள், ராமசரணம் டிரஸ்ட் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் எழுந்தருளினார்.
    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 11 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் பிரசித்தி பெற்ற வண்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்த ருளினார். பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு திரு மஞ்சனம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்து அருளி வீதி உலா நடைபெற்றது.

    • நவநீத பெருமாள் வீதிஉலா நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதிக்கு திருப்பரங்குன்றம் திருகூடல்மலையில் உள்ள கட்டிக்குளம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதபெருமாள் அங்கிருந்து ஆடி பவுர்ணமி அன்று புறப்பட்டு சுமார் 25 நாட்கள் பல ஊர்களில் வீதிஉலா சென்று மானாமதுரையை வந்தடைந்தார்.

    இதில் தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வைகைகரை அய்யனார், அலங்காரகுளம் சோனையா கோவிலுக்கு குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு நவநீதபெருமாள் எழுந்தருளி வந்தார். சுவாமியை பரம்பரை அறங்காவலர் காளீஸ்வரன் பூரண கும்பமரியாதையடன் வரவேற்றார்.

    பின் கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், நவநீதபெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பக்தர்களிடம் விடைபெற்ற நவநீதபெருமாள் மானா மதுரை சங்குபிள்ளையார் கோவிலில் தங்க வைக்கப்பட்டார். மறுநாள் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் மரக்கடையில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்லக்கை சுமந்து வந்த பக்தர்களுக்கு தொழில் அதிபர்கள் ஆனந்த கிருஷ்ணன், குணா ஆகியோர் மதிய உணவு வழங்கினர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நவநீதபெருமாள் வீதிஉலாவரும் நிகழ்ச்சியில் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    சுவாமி பல்லக்கு கீழமேல்குடி, கால் பிரவு வழியாக கட்டிக்குளம் சென்றது. அங்கு ராமலிங்க சுவாமி கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூட்டுகோல் மாயாண்டி சுவாமி தவசாலையான கருப்பனேந்தல் மடத்தில் நவநீதபெருமாளுக்கு வழிஅனுப்பும் விழா நடக்கிறது.

    அதைதொடர்ந்து நவநீதபெருமாள் பல ஊர்களில் வலம் வந்து வருகிற 4-ந்தேதி திருகூடல்மலைக்குவரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ×